காபி
காபி செடி, ரூபியேசி என்னும் தாவர இனத்தைச் சேர்ந்தது.கொய்னா, சின்கோனா, கடம்பு போன்ற செடிகளும் இதே இனத்தைச் சேர்ந்தவை.
அபிசீனிய நாட்டில் கவ்வா என்ற இடத்தில் தானாக வளர்ந்து கிடந்த ஒரு வலைச் செடியின் கொட்டையைத் தற்செயலாக மக்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.அந்தக் கொட்டைகளின் முழுப்பயன் தெரிந்தபின் அந்தச் செடியைக் கண்டு பிடித்த பிரதேசமான கவ்வா என்ற பெயரை வைத்தனர்.நாளடைவில் அது காபியென மாறியது.
மக்கள் காபிக்கொட்டையை முதன்முதலாக இனம்கண்டுகொண்டது சுவையான வரலாறு.கானகத்தில் பள்ளத்தாக்கில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன், தான் ஆடுகள் ஒரு வகை செடியின் காய்களைச் சாப்பிட்டவுடன் உற்சாகமாகக் குதித்து விளையாடுவதை கண்டான்.உடனே அவனும் அந்தக் காயைப் பறித்துச் சாப்பிட்டான்.அதன்பின் ஒரு தெம்பும், உற்சாகமும் ஏற்படுவதை உணர்ந்தான்.இதைத் தனது பகுதி மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அப்படித்தான் காபியின் பயன் உலகிற்கு வந்து சேர்ந்தது.
காபிக்கொட்டையை பானமாக்கி பருகும் வழக்கம் முதலில் அபிசீனிய மக்களிடம் தான் தோன்றியதாம்.காபி பானத்தை வணிக கண்ணோட்த்துடன் தயார் செய்து விற்பனை செய்யும் வழக்கம் இங்கிலாந்து நாட்டில்தான் முதலில் தோன்றியது.
காபியை பயிரிடுவதற்காக ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டன. அவற்றில் காபித்தோட்டங்கள் உருவாயின.காலையிலும், மாலையிலும் இலவசமாகக் காபியை கொடுத்து நமது மக்களைக் காபிக்கு அடிமையாக்கியவர்கள், ஆங்கிலேயர்கள்தான். அதற்கு முன்பு தமிழர்களின் காலைப் பானமாக இருந்தது நீராகாரம் தான்.நமது தட்ப வெப்ப நிலைக்கு இதுதான் ஏற்ற உணவாக இருந்தது.இன்று குக்கிராமங்கள் வரை காபிதான் பிரதான பானமாக உள்ளது.
தினத்தந்தியில் வெளிவரும் “தினம் ஒரு தகவல்
வெளியான ‘காபி’ தகவல் 23-05-2013
"வாங்க ஒரு கப் டீச்சாப்பிடலாம் "
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை, ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் விரும்பிப் பருகும் பானம் டீ
கி.மு. 2737-ம் ஆண்டிலேயே சீனர்கள் தேயிலையின் பயன்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.இந்தியாவில் அசாம் மாநிலம் தான் முதல் முதலாகத் தேயிலை பயிரிட்டது .1843-ம் ஆண்டு சாகுபடி செய்யப்பட்டது.ஒரு கிலோ டீத்தூளில் 400 கப் 'டீத்தயாரிக்கலாம். 'டீ' களைப்பை நீக்கிப் புத்துணர்வை அளிக்கிறது.மேலும் இதில் நிறைய சத்துகள் இருப்பதுடன், சில நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
ஒருவர் தினமும் 5 கப் 'டீ 'குடித்தால் ரிபோபிளாவின் 8சதவீதம், நியாசின் 14சதவீதம்,போலீக் அமிலம் 6சதவீதம்,பெண்டோ ரோனிக் அமிலம் 4 சதவீதம், தையாமின் ஒரு சதவீதம் ஆகிய சத்துக்களை பெறுகிறார்.இதுதவிர டீ யில் தாது உப்புகளும், உயிர்ச்சத்து 'சி'யும் அதிக அளவில் உள்ளன.
'டீ' அருந்தியபின் நமது உமிழ்நீர் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பின்பெருங்குடலில் அமிலம் அதிகமுள்ளதால் அங்கும் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. காரத்தன்மை கொண்ட சிறுகுடலில் தான் டீ யில் உள்ள தியாபிளாவில், தியாரூபிகில் ஆகிய பொருட்கள் குடலால் உறிஞ்சப்படுகின்றன.
இவை ரத்த நாளங்களின் குருக்களவை அதிகரித்து ரத்த ஓட்டம் சீராக ஓடச் செய்கின்றன.இதயத்திலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் விரிவடைவதால் மூளைக்கு அதிக ரத்தம் செலுத்தப்படுகிறது.இதனால் மூளைக்களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சிந்திக்கத் தூண்டுகிறது.
நல்ல தரமான தேயிலையில் சுமார் 20 அமினோஅமிலங்கள் உள்ளன.நியாசின் தோல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.போலிக் அமிலங்கள் ரத்த செல்களை உற்பத்தி செய்கின்றன. ரைமோபிளாவின் வாய் துர்நாற்றமின்றி சுத்தமாக இருப்பதற்கும், நாக்கு, உதடுகள், கண்கள், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதன் தேவை அவசியம். பல் பாதுகாப்புக்கு தேவையான புளோரைடு உடலில் சேருகிறது
தேநீர் அருந்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.சிறுநீர் பையில் உள்ள கற்கள் அகலும். பாக்டீரியாக்களைத் தாக்கும் எதிர்ப்புச் சக்தி பச்சைத் தேயிலைக்கு உண்டு.
தேயிலையில் உள்ள காப்பீன், நரம்பு மண்டலத்தைத் தூண்டி விட்டுச் சிந்திக்க உதவுகிறது.மேலும் காப்பீன் தலைவலி, காய்ச்சல் போன்றவற்றை நீக்குகிறது ஆகவே நண்பர்கள், "வாங்க ஒரு கப் டீச்சாப்பிடலாம் என்று அழைக்கும்போது தாராளமாக டீச்சாப்பிடுங்கள். அதே நேரம் காலை, மாலை மட்டும் அளவாகத் தரமான டீ அருந்துங்கள். அதே வேளையில் குடற்புண், நரம்புமண்டலக் கேடுகள் உள்ளவர்கள் டீ அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
தினத்தந்தியில் வெளியாகும் "தினம் ஒரு தகவல் "
என்ற பகுதியில் 22-07-2013-ல் வெளிவந்த கருத்து
ஸ்ரீ சக்தி டீ ஸ்டால்
ஸ்ரீ சக்தி டீ ஸ்டால் வில்லிவாக்கம் பகுதியில்
இந்த டீக்கடையைப் பற்றிக் கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள். அந்தளவுக்கு
மிகவும் பிரபலம். நேர்மையும், நாணயமும் மிக்க
இளம் பெண்களால் (சக்திகள்) நடத்தப்படும் தேநீர் விடுதி. பணத்தைப்
பார்த்து மயங்காதவர் யாரும் உளரோ ? எவ்வழியிலும், எப்படியாகிலும், நேர்மை இல்லாத முறையிலும், பணத்தை சம்பாதித்து கொள்ளலாம் என்ற மனப்பான்மை கொண்டவர்கள் ஒரு சில
பேர் இருந்தாலும், நான் இப்படித்தான் நேர்மையான வழியில்
சம்பாதிக்க விரும்புவேன் என்ற ஒரு சிலரில் இவர்களும் இருவர்.ஆம் இரட்டை சகோதிரிகள் நடத்தும் தேநீர் விடுதி.நேர்மையும் நாணயமும் மிக்க இளம் பெண்கள். தேநீர் க்கு மறு பெயர் சுறுசுறுப்பு. உழைப்பு இவர்களின் தாரக மந்திரம். ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள். மற்ற டீக்கடைகளில் விற்கப்படும் விலையோடு இவர்கள் கொடுக்கும் டீ விலையை ஒப்பிட்டுப் பாருங்கள்.உங்களுக்கும் புரியும். நேர்மை எங்கெல்லாம் வாழ்கிறது. முகவரி இங்குள்ள புகைப்படத்தைப் பெரியதாக ஆக்கிப் பாருங்கள். ஒவ்வொரு
முறையும் வில்லிவாக்கம் வருவீர்கள் என்றால் நிச்சயமாக நேர்மையை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். “நீதிக்கு தலை வணங்கு என்பார்
“புரட்சி தலைவர்
நான் நேர்மைக்கும்
தலை வணங்குகிறேன்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்