Type Here to Get Search Results !

மணப்பெண்ணின் சிகையலங்காரம்


மணப்பெண்ணின் சிகையலங்காரம்


திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணின் கூந்தலை பராமரிப்பது எப்படி?


கல்யாணம்  என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். இதில் மணப்பெண் அலங்காரம்  மிகவும் முக்கியமானது.

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணின் கூந்தல் அலங்காரம்பற்றிப் பார்போம்.

இங்கே  காண்கின்ற புகைப்படங்கள்  மணப்பெண்ணின் கூந்தல் அலங்காரத்தைப் பற்றியது.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

மணப்பெண்ணுக்கு கூந்தல் அலங்காரம் செய்யும் முன்பு, கூந்தலின் முன் பகுதியை அழகு படுத்துவது மிக முக்கியம்.

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம்.முகத்தின் முன்புறம் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு முன் வரிசை (front set) என்று பெயர். இதற்குப் பொருந்தும் அளவில் தான் பின்புற தலையை அலங்கரிக்க வேண்டும்.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

மணப்பெண்  அலங்காரத்தில் பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்வது, பின்னலில் பூ வைப்பபதற்கு பதில் ஜரிகை –முத்து-கற்களால் ஆன கைவேலைப்பாடுகளில் செய்வதும் அழகு தரும்.குழல் பின்னல் –ஐந்துகால் பின்னல் –மேலே கொண்டை-கிழே பின்னல், இப்படி பலவகைகள் உண்டு மாலை நேர வரவேற்பு அலங்காரத்தில் பின்னல் வேண்டும் என்று விரும்புவர்கள் கிழ்கண்ட புகைபடத்தைப் பார்த்து இதேப் போலும்  அல்லது வேறு வகைகளில் சிகையலங்காரம் செய்து கொள்ளலாம்.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

நீண்ட முடி உள்ளவர்கள் தங்க நூலினால் பின்னலைப் பின்னலாம்.மேலே கொண்டை கிழே பின்னல், குழல்ப் பின்னல், அடுக்கடுக்கு பின்னல், தங்க நிறம் கொண்ட செயற்கைப் பொருளில் ஆன வளையல்களைப் பின்னல்களில் பயன்படுத்தலாம்.மிகவும் அழகாக இருக்கும்.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம், கழுத்தின் சுற்றளவு போன்றவற்றை மிக உன்னிப்பாகக் கவனத்தில்கொண்டு சிகையலங்காரத்தில் ஈடுபட வேண்டும்.அப்போதுதான் மணப்பெண்ணின் அழகு குறைய வாய்ப்பில்லை.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

குட்டையான பெண்களுக்குச் சற்று தூக்கியவாறுகொண்டை போடலாம்.நீண்ட கழத்து இருந்தால் கழுத்தை மூடியவாறு கொண்டையை இறக்கியவாறு அமைக்கலாம்.  அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும்.


மணப்பெண்ணின் சிகையலங்காரம்

இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் வெளிவரும் 
பாகம் 2




































கருத்துரையிடுக

1 கருத்துகள்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சூப்பர்

Top Post Ad

Below Post Ad