முகம் நீளமாக உள்ளவர்களுக்குக் காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்துச் சுருட்டி அழகுப் பார்க்கலாம்.இது முகத்தை அகலமாகக் காட்டும்.
அகல முகம் உடையவர்கள் முகத்தின் முன்பக்க முடியைத் தூக்கி காட்டுவதன்மூலம் முகத்தை உருண்டையாகக் காட்டலாம்.நடுவில் வகிடு இருக்கும் இடத்தில ஒரு அழகான நெற்றிச் சுட்டியை அணிவித்தால் மணப்பெண்ணின் தோற்றம் பார்ப்பவர் மனதில் நீங்கா இடம் பெறுவர்.
திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பாகவே கூந்தல் அலங்காரத்திற்கு மணப்பெண்ணின் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.ஆழ்நிலை தியானம் கூட மணப்பெண்ணின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.கூந்தல் வளர்ச்சி மட்டுமல்ல முகப் பிரகாசமாய் இருக்கும்.
பாலேடு, பால் போன்ற வகையில் செய்த சாயங்களைப் பூசாமல் வாசனை தெரவியங்களில் செய்த மாவுகளை முகத்தில் பூசலாம். இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை வைத்து முகப்பொலிவு பெறலாம்.கூந்தல் அலங்காரம் செய்வதற்கு முன்பாக முகத்திற்கு நமது வீட்டில் இருக்கும் குளிர் சாதனப் பெட்டியில் கிடைக்கும் பனிக்கட்டியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
இயற்கையான நம் மண்ணிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை மென்மையாக வைத்துக் கொள்ளலாம். (golden-facial).
தினம்தோறும் தலைக்குச் சீயக்காய்ப் போட்டுக் குளித்து முடியை உறுதியாகச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.சூடான எண்ணையை தேய்த்து முடியைப் பிடித்து விடலாம். (massag) கூந்தல் மினுமினுப்பாக ஜொலிக்கும்
அழ்ந்த தூக்கம் அவசியம்.தினமும் குறைந்த அளவு எட்டு மணிநேரமாவது தூங்கி உற்சாகமாக எழக் கற்றுக்கொள்ளுங்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உங்களின் தேக அழகை வலுப்படுத்தும்.
மணப்பெண்ணின் சிகையலங்காரம் பாகம் ஒன்று
கருத்துரையிடுக
0 கருத்துகள்