ஆட்டோகிராஃப் விமர்சனம் 2021 cheran in autograph
சாதாரண இரசிகனாய் இருந்து எல்லா தமிழ் படங்களும் பார்க்கும் பார்வையில்தான் நானும் இப்படத்தை பார்க்க நேர்ந்து, பார்த்ததும் மனதை பறிகொடுத்து விமர்சனம் எழுதும் அளவுக்கு என்னை வெகுவாக ஈர்த்த யதார்தமான கலைப்படைப்பு என்று சொல்வதை விட ஒரு வாழ்வியல் தத்துவம் என்றே நான் கருதுகிறேன்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளே மறவாமல் ஓர் ஓரத்தில் மறைந்திருக்கும் நிஜம்.நிஜத்தை நிஜமாக்கி நினைவுகளை மறுபடியும் காலசக்கரத்தில்
பின்னோக்கி ஓட வைக்கிறார் மாபெரும் இயக்குனர் சேரன்
அவர்கள்.
2004 - ஆம் வெளிவந்த ஆட்டோகிராஃப் Autograph இத்திரைப்படம் வெள்ளித்திரையில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தது. அண்மையில்தான் இத்திரைபடத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் இப்போது வரும் திரைப்படங்களுக்குச் சவால் விடும் படமாகத் தான் ஆட்டோகிராப் இப்போதும் இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இயக்குனர் சேரன் அவர்களின் இந்தத் திரைப்படமும் காலத்தால் அழியாத கோலங்களாய் மக்கள் மனதில் நிறைந்து இருக்கும்.
காமம் பெருகி வரும் இக்காலத்தில் நட்பு என்னும் "அர்ஜீனன் ஏவும் அம்பு " யை ஏவியிருக்கிறார். அர்ஜீனன் குறி தப்பாது என்ற சொல்லுக்கேற்ப சேரன் என்னும் கலை வீரன் நட்பைப் பிரதானமாய் வெளிப்படுத்தியிருக்கார்.
மனிதநேயம் எப்போதுமே இவர் கலைப்படைப்பில் ஒளிர்விடும்
அந்த வரிசையில் சேரனுக்கு இந்தப் படம் " மகுடம் "தான்
பச்சைபசேல் தமிழகத்தையும் எழில் கொஞ்சும் கேரளத்தையும்
நம் கண்முன்னே ஒளிபதிவாளர்.
அவர்களின் திறமைக்கு நூற்றூக்கு நூறு என் மதிப்பென்
எண்கள் வெறும் எண்ணிக்கை அதையும் தாண்டி வாழ்த்துக்கள்
திருமதி ஸ்நேகா பிரசன்னா அவர்களின் நடிப்பு நடிப்பாகவே
அமையவில்லை நட்போடு ஜக்கியமாகியிருக்கிறார்.
மற்ற இரு நடிகைகளும் பாத்திரம் அறிந்து வியக்க வைத்திருப்பதில் சந்தேகமில்லை.
இசை கசையடி பரத்வாஜ் கலை உலகில் இவரும் மறக்கும் வரிசையில் இல்லை என்பது தெள்ளத் தெளிவு .கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இப்படத்தில் நடித்த அத்துணை திரை கலைஞர்கள் அவரவர் பாத்திரமறிந்து பரவசப்படுத்தி படத்தைப் பார்த்த ரசிகர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.மொத்ததில் நட்பைத் தூசீ தட்டியதன் விளைவு தும்மல் வரவில்லை,கண்ணீர்தான் கண்களில் அலைமோதியதுதான் நிதர்சனம். மறக்க முடியுமா?
இயக்குனர் சேரன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்
அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவிப்பதுடன் அவரிடம் மறக்காமல்
ஆட்டோ கிராஃப் வாங்குவேன்.
தவமாய் தவமிருந்து அவரைச் சந்திக்க முயன்று கொண்டு இருப்பேன்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்