Type Here to Get Search Results !

அறிஞர்களின் பொன்மொழிகள்

 

பிரபலங்கள் சொன்னது

எனக்குத் தினமும்  இருவேளை உணவுக்கு மட்டும்

முழு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும்

சிறப்பான கதைகளை, நாவல்களைத் தமிழ்க்கு

தந்திருப்பேன்.

- எழுத்தாளர்.பிரபஞ்சன். 

 

பேச்சு தங்கத்தைப் போன்றது.

அதை அதிகம் பயன்படுத்தும்போது

மங்கித் தகரமாகி விடுகிறது.

  • வெ.இறையன்பு.

     

    கல்விக்கும் அழிவில்லை, அதற்காகக்

    கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை

    - யாரோ.

     

    வாடினால் வருத்தும்

    ஓடினால் துரத்தும்

    தேடினால் சிக்காது

    வாழ்ந்தால் மட்டுமே

    வசப்படும் வாழ்க்கை


    வாழ்வியலோ, ஆன்மிகமோ,

    கல்லூரியோ, பள்ளியோ,

    அலுவலகமோ, தனித்தொழிலோ,

    ஆணோ, பெண்ணோ,

    மூத்தவரோ, இளைவரோ…

    இப்படி வாழ்வில் எந்தத்

    தகுதியில் இருந்தாலும்,

    எந்த வயதில் இருந்தாலும்

    எல்லோருக்கும் குறிக்கோள்

    என்பது அவசியமானது.


    சிறகுகளை விரிக்கக் கற்றுக்

    கொள்ளாதவரை சிறகுகளும்

    சிறைகளே.


    புரியாததெல்லாம் புனிதமா?

    தெரியாததெல்லாம் தெய்வீகமா?

    புரிக தெரிக தெளிக

    அறிவுக்கண் கொண்டு

    ஞானக்கண் திறந்திடுக!


    நடக்கத் துணியாத 

    பாதங்களுக்கு

    பாதைகள் தென்படுவதில்லை


    வீழ்வதே பூமியில் இயல்முறை!

    எழுவதே வாழ்வில் செயல்முறை!

    வீழ்பவை எழுந்தால் விளைச்சல்!

    வாழ்பவை பறந்தால் பாய்ச்சல்!


    எனக்கென்ன வந்தது என

    ஏகாந்தமாய் இராதே!

    நமக்கேன் வம்பு

    என்றிருப்பவர்கள் நமக்குள்

    ஒருவராய் இருக்க முடியாது!

    தனக்கே தனக்காய்த்

    தனிப்பட்டுப் போவரே!


    கலசங்கள் கோபுரங்களைத்

    தாங்குவதில்லை!

    மாறாக அலங்கரிக்கின்றன…

    சில பதவிகளைப் போல!


    சிறகுகள் வானத்தை நோக்கி

    விரித்திருந்தாலும்-கால்கள்

    பூமியை நோக்கியே இருக்கட்டும்!

    பறத்தலுக்கும் இருத்தலுக்கும்-இடையே

    நிறைய வேறுபாடுகள் உள!


    நேரமே ஒழுங்கு

    இதுவே சாதிக்கத்

    துடிக்கும் ஒவ்வொரு

    இளைஞனுக்குமான

    மந்திரமாக ஒழுங்கமைவு

    பெற வேண்டும்.


    வருத்தங்களைச் சுமப்பதற்கு

    மகிழ்ச்சிப்படுங்கள்!

    மகிழ்ச்சிகளைச் சுமப்பதற்கு

    வருத்தப்படுங்கள்!

    மாற்றுணர்வு கொள்வதால்தாம்

    மாற்றங்கள் நிகழ்கின்றன!

     

    - முனைவர்.சுந்தர ஆவுடையப்பன்.

     

    கல்வி பயின்ற சான்றோர், உண்ண

    உணவின்றி சிரமம் அடையலாம்.ஆனால் அந்த 

    நிலைக்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்.

    சிந்தனையில் சிறியோரே வறுமைக்கும்

    இல்லாமைக்கும் வருந்தக்கூடியவர்கள்.

    - சீன அறிஞர்.கன்பூஷியஸ்.

     

    மரணம் என்னை விழுங்கும் வரை,

    நான் ஒரு மாணவன் ;

    படித்துக் கொண்டேயிருப்பேன்.

  • கார்ல் மார்க்ஸ்.


நம்பக்கூடாதவனை நம்பிக் கெடுவதும்

தவறு.

நம்பக்கூடியவனை நம்பாமல் கெடுவதும்

தவறு.

  • கண்ணதாசன்

  •  

    மகான்களின் பொன்மொழிகள் 

      

    போதிக்கும்போது புரியாது
    பாதிக்கும்போது தான் புரியும் 


    பொன்னால் செய்த ஆபரணங்களையும், வேட்டி, 

    சேலைகளையும், நாற்காலி, குடம் முதலியவைகளையும்

    காணும்போது, அவற்றைச் செய்தவர், ஒருவர் உண்டு

    என உணர்வது போல், தேகாதி பிரபஞ்சங்களை எல்லாம் 

    காணும்போது இவைகளை உண்டாக்கியவர், ஒருவர் உண்டு

    என்று நம்புதல் வேண்டும்.

    - திருமுருக கிருபனாந்த வாரியார்.

     

    நாம் இப்போது மிருகங்களைவிட ஒன்றும்,

    அதிக ஒழுக்கமாக இல்லை.

    'திருடுவதற்கு தண்டனை கிடையாது'

    என்று சமூகம் இன்று சொல்லட்டும்.

    அவ்வளவுதான், ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய

    சொத்துக்களின் மீது அப்படியே பாய்ந்து விடுவோம்.

    சழூகத்தின்சாட்டைஒன்றுதான்நம்மைக்

    கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.


    நீங்கள் ஆன்மிகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்

    என்பதற்கு முதல்அடையாளம், உற்சாகமாக இருப்பதுதான்

    முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது, அஜீரணத்தின்

    விளைவாக இருக்கலாம்.வாடிய முகத்தால் உங்களுக்கு

    ஆகப்போவது என்ன? அது பயங்கரமானது.


    ஏழை, பாமரர், ஒதுக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுகின்ற

    முயற்சியை, இளைஞர்களான உங்களிடம் ஒப்படைக்கிறேன்…

    நாள்தோறும் அதோகதியாகப் போய்க்கொண்டிருக்கும்,

    அதுபோன்றவர்களின் உய்விற்காக, உங்கள் வாழ்க்கை

    முழுவதையும்  அர்ப்பணம் செய்வதாகச் சபதம் செய்யுங்கள்.


    எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான், இந்தஓர்

    உண்மையை உண்ர்ந்தேன்.கடவுள் ஒவ்வோர் உயிரிலும்

    நிறைந்துள்ளார்.

    அதைத் தவிர வேறு கடவுள் இல்லை.உயிர்களுக்குச்சேவை

    செய்பவன், உலகத்தின் நாயகனாக விளங்கும் இறைவனுக்கு

    சேவை செய்தவனாகிறான்.


    பொய் சொல்லித் தப்பிக்க நினையாதே

    உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்

    ஏனென்றால் பொய் வாழ விடாது

    உண்மை சாகவிடாது.


    கட்டளையிடும் பதவி

    வேண்டுமானால் முதலில்

    கீழ்ப்படியக் கற்றுக்கொள்.


    நீங்கள் தன்னலத்தைத் துறந்தவரா?

    அப்படியானால் உங்களை எதிர்க்கும்

    சக்தி எதுவுமில்லை.

     

    - சுவாமி விவேகானந்தர்.

     

    நான் சொல்லும் விஷயம் இதுதான்.

    எவராகயிருந்தாலும் வீட்டின் மாடியிலேயே

    நீண்ட காலம் தங்கி விட முடியாது.ஒரு நாள் கிழே

    இறங்கி வந்துதான் ஆக வேண்டும்.அதுபோல்

    சிறிது காமம், கோபம் இல்லாமல் இந்த உடல் நிலைக்காது.

    எனவே நீங்கள் அவற்றைவிட வேண்டியதில்லை.

    குறைத்துக் கொண்டால் போதும்.


    யானை தன் வழியில் போகும்போது, அதன் பின்னால்

    எத்தனையோ மிருகங்கள், எப்படியெல்லாமோ கூச்சலிடுகின்றன.

    ஆனால் யானை அவற்றையெல்லாம்

    திரும்பிக்கூடபார்ப்பதில்லை.அதுபோலவே

    உங்களை இகழ்ந்துரைப்பவர்களை எல்லாம் பற்றி,

    நீங்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்?


    வாழ்க்கையைப் போலவே இறுதி காலம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

    மக்கள் வேலை காரணமாகத் தங்கள் கிராமத்திலிருந்து

    நகரத்துக்கு வருவது போல, நாம் இந்த உலகத்திற்கு

    வந்திருக்கிறோம்.வந்த வேலை முடிந்தால் திரும்பிச்

    சென்று விட வேண்டியதுதான்.


    இந்த உலகம் தோன்றுவதற்கு அடிப்படையான பராசக்தி,

    'வித்யா, அவித்யா' என்ற இரண்டு வகை சக்திகளாய் செயல்புரிகிறாள்.

    வித்யா சக்தி, அன்பு, தயை, ஞானம், பக்தி ஆகியவற்றை

    ஒருவரிடம் தோற்றுவிக்கும்.அவித்யா சக்தி,

    பெண்ணாசை, பொன்னாசையை தோற்றுவித்து

    மயக்கம் தருவது.அவளே நமது கண்ணை

    மூடுகிறாள்.நமக்கு விழிப்பையும் ஏற்படுத்துகிறாள்.


    சந்தேகம் குடிகொண்டுள்ள மூளையில்

    அறிவு நிலைப்பது கிடையாது.

     

    - சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர்.

     

    சக்தி அச்சமில்லை

     மேலும்  பொன்மொழிகள்

    ஆலயத்தில்  கண்ட பொன்மொழிகள் 

     

    குருவின் பொன்மொழிகள்  

     

    சுவாமியின் கட்டளைகள்   

     

     


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad