Type Here to Get Search Results !

குருவின் பொன்மொழிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய வைர வரிகள் 

பொன்மொழிகள்
குருவின் பொன்மொழிகள்



பொன்மொழிகள்

நம்பிக்கை 
இறைவனிடம் நீங்கள் வைக்கிற நம்பிக்கை 
அசைக்க முடியாததாக இருக்க வேண்டும்.நான் இறைவனின் பெயரை ஜெபிக்கிறவன் பாவம் எப்படி என்னிடம் வர முடியும் என்ற நம்பிக்கையும், இறைவனது பெயருக்கு இருக்கும் சக்தியில் நம்பிக்கையும் வைக்க வேண்டும். 

பொன்மொழிகள்

ஏழைக்கு ஏழை 
இன்று புகழ்கிற அதே வாய் 
நாளை நித்திக்கும்.
பெயர் புகழ் நான் விரும்பவில்லை 
ஏழைக்கும் ஏழையாக 
எளியவருக்கு எலியாவனாக
இருக்கவே விரும்புகிறேன் 

பொன்மொழிகள்

அஞ்ஞானம் 
" இதனை நான் செய்தேன் 
" இது என்னுடையது "
என்று நினைத்தால் 
அது அஞ்ஞானம்.
அந்த நினைப்போ பாவ  காரியங்களூக்கு
வித்திடுகிறது.
மனிதனுக்கு பாவத்தைப் பற்றிய பயத்தையும் 
தண்டனையையும் உணர்த்தவே 
இறைவன் அஞ்ஞானத்தை 
அவனுக்குள் வைத்திருக்கிறான்.  

பொன்மொழிகள்

அறியாமை 
தவளையின் குஞ்சான தலைப்பிரட்டையை 
அனைவரும் பார்த்திருப்பிர்கள்.
வால் இருக்கும் வரை அது 
தண்ணீரில் மட்டுமே வசிக்க முடியும்.
வால் விழுந்துவிட்டால் 
நீர், நிலம் இரண்டிலுமே வசிக்க முடியும்.
அது போலவே நம்முடைய 
அறியாமையாகிய வால் விழுந்து விட்டால் 
நாம் உலக வாழ்விலும் இருக்கலாம்.
கடவுளின் பேரின்பத்தையும் அனுபவிக்கலாம். 

பொன்மொழிகள்

வேறு படுத்த முடியாது 
பிரம்மத்துக்கும், சக்திக்கும் உள்ள வேறுபாடு 
சொல்லளவிலேயே  அன்று உண்மையில் இல்லை.
நெருப்பும் அதன் உஷ்ணமும் 
பாலும் அதன் வெண்மையும்
மணியும் அதன் ஒலியும் 
ஒன்றானவைப் போல
பிரம்மமும் சக்தியும் ஒன்றானவை. 
ஒன்று இல்லாமல் மற்றொன்டை 
நினைக்க முடியாது. அல்லது 
அவையிரண்டையும் வேறுப்படுத்தவும் முடியாது.









கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad