சுவாமி விவேகானந்தரின் நூற்றியைம்பதாவது பிறந்தநாள்
தமிழ்நாடு முழவதும் ஓராண்டு கால தொடர் கொண்டாட்டம்
ஞான ஒளியை வணங்குவோம்
சுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்
150 - வது பிறந்தநாள்
வாருங்கள் அவர் வழி நடப்போம்
சுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்
150 - வது பிறந்தநாள்
உண்மை - தூய்மை - சுயநலமின்மை ஆகிய
இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ
அவற்றைப் பெற்றிருப்பவர்களை கெடுக்கக்கூடிய
ஆற்றல் விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ எங்குமே
கிடையாது.இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனை
பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும்
அதை எதிர்த்து நிற்கக்கூடிய
ஆற்றல் அவனுக்கு உண்டு.
ஒழுக்கம்
நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச்செல்வது
நல்லொழுக்கம்.
கீழ் நிலைக்கு இழத்துச் செல்வதே தீயயொழுக்கம்,
மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு
என்ற இந்த மூன்று குணங்களால்
மனிதன் உருவாக்கப்பட்டுருக்கிறான்.
வாழத் தகுதி பெற்றவன்
தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன்
வெளியே உள்ள எதற்கும் வசப்படமாட்டான்.
அவனுக்கு அதன்பின் அடிமைத்தனம் இல்லை.
அவனது மனம் விடுதலை பெற்று விட்டது.
அத்தகையவனே உலகத்தில் நன்றாக
வாழுகின்ற தகுதியைப் பெற்றவன்.
வாழ்வின் அறிகுறியாக
எழுந்திருங்கள், உழையுங்கள் இந்த வாழ்வு
எத்தனை நாளைக்கு ?
உலகில் வந்து விட்டிர்கள். அதற்கு அறிகுறியாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.
இல்லாவிட்டால் உங்களுக்கும்
மரங்கள் மற்றும் கற்களுக்கும் என்ன வேறுபாடு ?
அவையும் தோன்றுகின்றன, கெடுகின்றன. மறைகின்றன.
உண்மை பாதை
மக்கள் உங்களைப் புகழ்ந்தாலும் சரி
இகழ்ந்தாலும் சரி
உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை அருள் புரியட்டும்.
புரியாமல் போகட்டும். உங்கள் உடல் இன்றைக்கே
விழுந்து போகட்டும்.நீங்கள் மட்டும் உண்மை என்னும்
பாதையிலிருந்து அனுவள வேணும் விலகி
செல்லாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
மனித இயல்பு
நம் பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள்
எல்லாவற்றையும் வேறொருவரின் மேல்
சுமத்துவது பொதுவான மனித இயல்பு.
நம்முடைய தவறுகளை நாமே புரிந்து
கொள்வதில்லை.நம் கண்களை நாம்
பார்க்க முடியாததைப் போல.
பணம்
மனிதன் அல்லவா பணத்தை உருவாக்குகிறான்.
பணம் மனிதனை உருவாக்கியது என்று எங்கே
நீ கேள்விப்பட்டாய் ?
உன் எண்ணத்தையும், பேச்சையும் முழமையாக
ஒன்று படுத்திவிட்டால், உன்
பேச்சும், செயலும் ஒன்றாக இருக்குமானால்
பணம் தண்ணீரைப் போல் உன்
காலடியில் வந்து கொடும்.
கல்வி என்றால் என்ன ?
புத்தகங்களைப் படிப்பதா ? இல்லை
பலவற்றை குறித்த அறிவா ? அதுவும் இல்லை.
எத்தகைய பயிற்சியின் மூலம்
மன உறுதியின் வேகமும், அதன் வெளிப்படும்
தன்மையும் கட்டுபாட்டிற்கு உட்பட்டு பயன் தரும்
வகையில் அமைகிறதோ அந்தப் பயற்சிதான்
கல்வியாகும்.
ஆசை
பழைய இனங்கள் எல்லாம் பொன்னாசை
அதிகார வெறி ஆகியவற்றின் விளைவாகிய
கொடுமை, துன்பம் முதலியவற்றின்
சுமை தாங்க முடியாமல் அழிந்தே
போயிருக்கின்றன.புதிய இனங்களோ
அதே சுமைகளால் தள்ளாடி விழும்
நிலையில் இருக்கின்றன.
மேலும் பொன்மொழிகள் இங்கே சுட்டவும்
கருத்துரையிடுக
0 கருத்துகள்