Type Here to Get Search Results !

முடி வளர சித்த மருத்துவம் சொல்லும் பதினோரு வழிகள்

சித்த மருத்துவம் என்றைக்கும் சிறப்பு 
 

முடி உதிர்வதை தடுக்க:


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளைக் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:


கீழநெல்லி வேரைச் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:


நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:


ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:


அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:


மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:


தாமரை பூக்கஷாயம் வைத்துக் காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:


கறிவேப்பிலை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:


நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்துச் சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

தலை முடி நன்கு வளர...


தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்¬ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்¬ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ¬ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

இந்தச் சித்தமருத்துவ முறைப்படி நீங்கள் செயல் முறைகளில் செயல்ப்பட்டால் நிச்சயம் நான்கு பேர் என்ன நான்கு லட்சம் பேர் உங்கள் தலை முடியைப் பார்த்துப் பொறாமை  கொள்வார்கள்.
நன்றி.
தமிழ் சித்தர்களின் அறிவியல் விழிப்புணர்வு என் முக நூலில் வெளிட்ட கருத்து. 


















கருத்துரையிடுக

1 கருத்துகள்
அத்திப்படான் இவ்வாறு கூறியுள்ளார்…
payanulla thahavalkal nandri.

Top Post Ad

Below Post Ad