கண்ணா கருமை
நிறம் கண்ணா
நீல வண்ண நீல மேகா
கோகுலத்து கேசவா
நீ குழல் ஊத நான்
நடனமாட என்ன
தவம் செய்தேன்
மாதவா
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்
கேட்டவருக்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
குருவாயூர் தண்ணில் அவன்
தவழ்கின்றவன்.ஒரு
கொடியோடு மதுராவை
ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன்
அருள்கின்றவன் -அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி
கொள்கின்றவன்
நல்லவனுக்கு நலம் நடக்கும்
என மட்டும் நம்பாது
வல்லவனாயும் வாழ்ந்து விடு பாப்பா !
- மகாகவி பாரதியார்.
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக்
காக்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவருக்கும் எழையருக்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே !
கீதையை தந்த நாதனே
சாரதியே பார்த்தசாரதியே
படை கொண்டு விடை கொடுத்தாய் மன்னவனே
கீதையைக் கொடுத்துப் பகைவர்களூக்கும்
அருள் புரிந்திட்ட பரந்தாமனே
அருள் புரிவாய் எமக்கும் !
பன்னீர் மலர் சொரியும்
மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
புகழ் பாடுங்களே
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
புகழ் பாடுங்களே
தருமம் என்னும் தேரில்
ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க
கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கிருஷ்ண மந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே
குழல் ஊதும் கண்ணனுக்கு
குயில் பாடு கேட்கின்றதா
ஏழு ஸ்வரங்களூக்குள் எத்தனை ராகங்கள்
உன் குழல் இசையில் மயங்காதவர்கள்
எவருமுண்டோ ?
கண்ணா எத்தனை
அவதாரமெடுத்தாலும்
கண்ணா நீ எங்களுக்கு
குழல் ஊதும் கண்ணனே !
கருத்துரையிடுக
0 கருத்துகள்