சொல்லடி சிவசக்தி
*********************************
சொல்லடி சிவசக்தி
நான்யிருப்பது உனக்குப் பாரமா
உன் கண்ணுக்குள் தெரிவது ஈரமா ?
சொல்லடி சிவசக்தி
உன் நெஞ்சுக்குள் இருப்பது
நானாம்மா ?
வேதனையைக் கொடுப்பதில்
உனக்குப் பிரியமா ?
சொல்லடி சிவசக்தி
வாழத்தானே பிறப்பு
வழிக் காட்ட மறுக்கிறாயே
விழி திறந்து பார் அம்மா
வழி ஒன்று சொல்லம்மா
சொல்லடி சிவசக்தி
வாடி வதங்கி நிற்கிறேன்
வணங்கி நின்று கேட்கிறேன்
வந்தருள் புரிய தவிர்ப்பதுயேன் ?
சொல்லடி சிவசக்தி
மனமுருக வேண்டினேன்
மனக்குறையை தீர்க்க
மடியேந்தி நின்றனே
மறுமொழியேன்
மறுப்பதுயேன் ?
மறந்தாயா எனை?
சொல்லடி சிவசக்தி
மன்றாடி வந்தேனே
மனம் வருந்தி அழுதேனே
மனமிரங்க மறுப்பதுயேன் ?
சொல்லடி சிவசக்தி
மலர் தூவி அர்ச்சித்தும்
மந்திரங்கள் பல ஓதியும்
மணி ஒலி இசைத்தும்
மெளனமே உன் நிலையா?
சொல்லடி சிவசக்தி
பொருள் வேண்டி
புகழ் வேண்டி உன்னிடம்
நாடவில்லை
எனை நீ அறியாதவளா?
எனை காத்தவளே
சொல்லடி சிவசக்தி
தமிழ் வேண்டும்
தங்கு தடையில்லா உனை
நான் போற்றவே
நீ எனை வாழ்த்தவே
உயர்வோடு நல்வாழ்வும்
பிழையில்லா நற்கதியும்
கொடுத்தருள்வாய்
கருத்துரையிடுக
0 கருத்துகள்