Type Here to Get Search Results !

நட்பு - friendship




காதலுக்கு கண்யில்லை
கண்டவுடன் காமத்திற்கு 
தடையில்லை 
கொஞ்சி கொஞ்சியே 
கவிதை பாடி 
கவர்ந்திழுத்தாய்
கெஞ்சி கெஞ்சியே
குரல் ஒலியில்
கடிதம் எழுதினாய்
கட்டுடலை காண்பித்து 
கட்டிலிக்கு அழைத்தாயே 
காம தீ வளர்த்து 
மோகத்தில் ஆழ்த்தினாயே  
எதிர்காலம் நீயென நம்பி 
என்னுடலை தாரை வார்தேன்
உன்னுடனே உறவையும் வளர்த்தேனே
தேனே மானே கரும்பே பசுமையேயென
ஏகமாய் வருணித்துயிருந்தாய் 
ஏழு ஸ்வரமே 
எட்டாத மாங்கனியே 
மயக்கும் என் பூங்கொடியே
என எனை 
பாடலில் போற்றியிருந்தாய்
நான் பஞ்சு நீ நெருப்பு என்றாயே
உன்னையே நான்பற்றிக் கொண்டனே 
உள்ளத்திலும் உன்னையே 
உயர்வாய் உயர்த்திருந்தேனே
உற்சாகம் குறையாமல்
உன் முகம் வாடாமல்
உனதருகில் உறைந்திருந்தேனே
உனை நினையாமல் ஒரு நாளும்
உண்பதுமில்லை 
உறங்கியதுமில்லை 
உனது பெயரை
உச்சரிக்க
மறந்ததுமில்லை
ஊரார் உறவார் தவறாகப் பேசினாலும் 
உளறல் என உதறி 
உனை உதறாமல் உயர்த்தியே 
உள்ளத்தில் வைத்தேனே
உச்சி முதல் பாதம்வரை 
உன் பெயரை வடித்தேனே
உனதுருவம் கண்டால் 
எனதுள்ளம் கசிந்துருகுமே 
ஆடி முடிஞ்சதும் 
ஆவணியிலே கல்யாணம் 
கல்யாணம் முடிஞ்சதும் 
தேனியிலே கொண்டாட்டம்ன்னு
உற்சாகத்தில் முழங்கினாயே 
ஊர் முழுக்க உளறினாயே
முந்தானையில் முடிந்திருந்தேன் 
முடிச்சு அவிழ்த்து 
மூவுலகு சென்றாயோ 
சொல்லாமலே காணாமல் போனாய் 
உனை காணாமலே 
உணர்விழந்து போனேனே 
தண்ணீரும் பருகாமல் 
தவித்திருந்தேனே 
தவிர்க்க இயலாது உனை 
தத்தளிக்கும் மனதை
தவிக்க விட்டுச் சென்றாயே 
தாவி வந்து தாங்குவாயா 
உனை மறக்க மனமேது 
நீதான் வேரென்று 
நான்தான் மரமென்று 
உறுதியாய் நின்றிருந்தேனே 
நீ வேறு நான் வேறு என
வேரோடு வீழ்ந்தாயோ
விபரீதம் புரியாமல் 
விண்ணுலகம் சென்றாயோ
அகால மரணம் 
ஆபத்தாய் முடிந்ததே
அதிர்ந்துதான் போனேன்
விழி பிதுங்கி வழி தெரியா 
மதி சிதைந்து  நடைபிணமாய்   
  

மேலும் கவிதைகள் படிக்க 
இங்கே சுட்டவும்
 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad