Type Here to Get Search Results !

நாணயமும் தங்கமும்



நாணயமும் தங்கமும்


மற்ற பொருள்களின் விலையை மதிப்பிடக்கூடிய முறை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது தங்கம்.

இன்றைய ருபாய் நோட்டுகளில்,
கேட்கும்போது நான் இந்தத் தொகையைக் கொடுப்பதாக உறுதியளிக்கிறேன்என்று ஒரு வாசகம் இருப்பதை கவனிக்கலாம்.அதற்குப் பொருள், அந்த ருபாய் நோட்டின் மதிப்புக்கு ஏற்ற அளவு தங்கம், நோட்டு அடிக்கும் உரிமை கொண்ட அரசின் இருப்பில் உள்ளது என்பதுதான். தங்கத்தின் பெறுமானத்துக்கு ஏற்பத்தான் நோட்டுக்கள் அடிக்க முடியும்.

அணுவைப் பிளந்து தொடர் நிகழ்ச்சியைத் தூண்டி ஆற்றலைப் பெறலாம் என்கிறது அணு விஞ்ஞானம்.தங்கம் இருப்பில் இல்லாமல் நோட்டுகளை அடித்துக் குவித்துக் கொண்டிருந்தால் அந்த நோட்டுக்கும் வெறும் தாளுக்கும் மதிப்பில் அதிக வேறுபாடு இருக்காது.பணவீக்கம் ஏற்படும்.விலைவாசி உயரும்.வாங்கும் திறன் குறைந்து உற்பத்திப் பொருள் தேங்கும்.உற்பத்தி குறைய, வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகும்.இத்தகைய தொடர் நிகழ்ச்சி ஏற்படும் என்கிறது தங்கவிஞ்ஞானம்.

தங்கத்தின் பொதுச் செலவாணி மதிப்புத்தான்உலக வர்த்தகத்தைப் பெருக்க

உறுதுணையாக இருக்கிறது.இந்தத் தங்கத்தைப் பெற எத்தனை உயிர்ப் பலிகள்?

இதற்குக் காரணம் இது மிகவும் அரிதாகக் கிடைப்பதுதான்.தங்கத்தைத்தான்
 
மனிதன் முதலில் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

கி.மூ.10-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா, சீனா, மெசபடோமியா, கிரேக்கம் ஆகியநாடுகளில் தங்கம் புழக்கத்தில் இருக்கிறது.கி.மூ.7, 8- ம் நூற்றாண்டு வாக்கிலேயே தங்க நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.இந்தியாவிலும், வடகிழக்குஆப்பிரிக்காவிலும், லிபியாவிலும் மிகத் தொன்மையான தங்கச் சுரங்கங்கள் இருந்திருக்கின்றன.மொகஞ்சதாரோவில் கூடத் தங்கநாணயங்கள் கிடைத்ததாகக்  கூறப்படுகிறது.

உலக வரலாற்றில் தங்கத்தைப் போல் பங்கு வகித்த உலோகம் வேறு எதுவும் இல்லை.தங்கத்துக்காகப் பல போர்கள், பல கொள்ளைகள், எண்ணற்ற உயிர்ப் பலிகள்.

உடையாத கண்ணாடிப் பாத்திரம் கண்டுபிடித்தான் ஒருவன்.அதனால் தங்கத்தின் மதிப்பே குறைந்துவிடும் என்று அவனைக் கொன்றுவிட்டான் ஒரு மன்னன் என்கிறது ஒரு கதை.தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வாரம் பெற்று வதைபட்ட மன்னனின் கதையும் உண்டு.

தங்கம் ஓர் அபூர்வமான உலோகம்.மஞ்சள் நிறமுடையது. தூய தங்கம் பசுமை நிறம் கலந்தாக இருக்கும்.அதனால் அதைப் பசும்பொன் என்கிறார்கள்.மிருதுவாகவும் இருக்கும்.அதாவது அப்பபடியே பயன்படுத்தும் அளவுக்கு உறுதியாக இருப்பதில்லை.அதை  24 காரட் தங்கம் என்பார்கள்.நாம் நகைகள் செய்யப் பயன்படுத்தும் தங்கம் 22 காரட். இது வெள்ளி அல்லது செம்பு கலந்தது.

தொன்று தொட்டே தங்கம் மிக விலை உயர்ந்த பொருளாக இருந்ததால் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்றும் முயற்சி அன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. இதற்காகப் பல ரசவாதிகள் பல நூற்றாண்டுகள் பெரும்பாடுபட்டுவந்தனர்.ஆனால்  வெற்றி பெற முடியவில்லை.

உலகில் தங்க உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு தென்ஆப்பிரிக்கா, இரண்டாவது ரஷ்யா, கனடா, அமெரிக்கா ஆகியநாடுகளிலும் குறிப்பிடத் தக்க அளவு தங்கம் கிடைக்கிறது.

நம் நாட்டில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைவு என்றாலும், இந்திய மக்களிடம் இருப்பில் உள்ள தங்கத்தின் அளவு உலகிலேயே அதிகம்.




நன்றி 17-11-2011.இளைஞர் மலர். தினத்தந்தி      






கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad