வங்கி கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகளைப் பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது.இதற்கு முன்னர், வங்கி கணக்கு துவங்க விரும்புவர்கள் அடையாளம் மற்றும் முகவரிகுறித்த தகவல்களுக்குகாக வெவ்வேறு ஆதார ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக இருந்தது.
முகவரி
தற்போது அடையாள ஆவணதில்லேயே முகவரியும் இடம் பெற்றிருக்குமானால் அந்த ஆவணத்தையே இரண்டிற்க்குமான ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்குப் பாரத ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், வங்கி கணக்கு தொடங்க கோரப்படும் ஆதார ஆவணங்களின் பட்டியலில் ஆதார் கடிதம் மற்றும் அட்டை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பணியாளர் அட்டை ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு மாநில அரசு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாடகை ஒப்பந்தம் நகல், வங்கி கணக்கு தொடங்க விரும்பும் ஒருவரது முகவரிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.இருப்பினும் வங்கி கணக்கு தொடங்க கோரும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் முகவரி அடையாள அட்டையில் காணப்படும் முகவரியிலிருந்து மாறுபட்டு இருந்தால் முகவரியை நிருப்பிப்தற்காக வேறு ஆவணத்தை இணைக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு தொடங்க கோரும் ஒருவரை வங்கிக்கு வேறு ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம் இல்லை எனவும் இதுகுறித்து வாடிக்கையாளர்களை வலியுறுத்தலாகாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவு படுத்தி உள்ளது.
இக்கட்டுரை 12-12-2012- அன்று தினத்தந்தியில் –ல் the economices times –என்ற பகுதியில் காயத்திரி நாயக் மும்பை என்பவரால் எழதப்பட்டது.
கருத்துரையிடுக
0 கருத்துகள்