பெயரிலே இறை மற்றவர்களிடம் காட்டுவதோ அன்பு இவர்தான்
“ வெ. இறையன்பு இவர் பேசும் வார்த்தைகளில் ஜாலம் இருக்காது தொனி இருக்கும். இவரிடம் மெத்தப்படித்த தலைக்கணம் இருக்காது. தமிழக சுற்றுலாத் துறை இவரால் இவர் கைவண்ணத்தில் இவர் எண்ணங்களில் மேன்மை அடைந்தது. சிறந்த சொற்பொழிவாளர், புத்தகங்கள் இயற்றுவதில் வல்லமை கொண்டவர். சிறந்த இலக்கியவாதியும் கூட நற்குணங்கள் இவருடன் ஓட்டிப்பிறந்தவை.மெத்த படித்தவர் ஆயினும் அழகானவர். ஆவேசம் என்பது இவர் பேச்சில் காண்பது அரிது. வள்ளுவனின் குறள்கேற்ப இவர் வாழ்க்கை அமைந்திருக்கும். நட்பு பாராட்டுவதில் வல்லவர். இவருடைய இலக்கியங்களை நுனிப்புல் மேயாமல் மனம் ஒன்றிப் படித்தோமானால் நாம் வாழ்கையில் வழி தவறி செல்லமாட்டோம். இது உறுதி. ஆண் – பெண் பேதம் இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல், படித்தவன் – படிக்காதவன், ஏழை – பணக்காரன், என்று பாராமல் பழகுவதில் இனிமையானவர். இவர் ஆற்றுகின்ற உரைகள் கேட்பவர்கள் மனம் லயத்து இவர் வழி நடப்பவர்களும் உண்டு. இது உண்மை.
ஆனந்தத்தை தேடி எங்கும் செல்ல வேண்டாம். “கதவைத் திற காற்று வரும்“ என்று சொல்லும் நித்யானந்தாக்களை தேடி மடம் மடமாக அலைய வேண்டியதில்லை, ஆனந்தங்களை தேடி ஆனந்தாக்கள் வழி செல்ல வேண்டாம் துன்பங்கள்தான் உன் வீடு தேடி வரும்.
னாந்தாக்கள் ஆனந்தமாக இருக்க நாம்தான் துணை போகிறோம்.தவிர ஆனந்தம் என்னும் காற்றை சுவாசிக்க போனால் துன்பம் என்னும் அலையில் மாட்டிக் கொண்டு விடுவோம். ஆனால் நற் சொற்பொழிவாளர் இறையன்பு சொல்லும் சொற்பொழிவுகளைக் கேட்டாலே நாம் வாழ்க்கை என்னும் அலைகளில் எதிர் நீச்சல் போடலாம். துன்பம் என்னும் விதியை மதி என்னும் நுட்பத்தால் தகர்க்க பார்க்கலாம். வாழ்க்கை கடினம்தான், ஆனால் வாழ்ந்து பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள மாணவ – மாணவியர்களை கேட்டால் போதும். உண்மை புலப்படும். நூற்றுக்கு நூறு உண்மை. நீ யாரை போல் வர வேண்டும் என்று நினைக்கிறாய் என்றால் நான் இறையன்பு போல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். நவீன காலத்து குழந்தைகள் முதல் கல்லுரி மாணவர்கள்வரை.என் காலத்தில் இவர் களம் புகுந்து இருந்து இருக்க கூடாதா ? என்று ஏங்கி தவிக்கும் என்னைப் போன்றவர்கள் மனம் ததும்பி இருக்கிறார்கள்.
அடுத்த ஜென்மத்தில் யாராகப் பிறக்க இறைவனிடம் கையேந்துவீர்கள் என்று கேட்டால் இறையன்பு போல் பிறக்க வரம் கேட்பேன்.
இவர் பேசும் தலைப்புகள் வித்தியாசமாக இருக்கும்.
ஓவ்வொரு நொடியும் உன்னதம்.
வறுமை ஒரு தடையல்ல.
நல்லபழக்கங்கள்.
மாணவர்களும் நற்பண்புகளும்.
அனுபவமே அறிவுரை.
இதுப் போன்ற ஏரளாமான தலைப்புக்கள்.
சொல்வதற்கு நிறைய பக்கங்கள் தேவைப்படும்.
இவர் கலந்துகொண்டு இவர் ஆற்றும் உரைகளை நமது கவனத்தில் கொண்டு வந்தோமானால் வரும் தலை முறைகளின் எதிர்காலம் மிகச் செழிப்பாக உயரும் என்பது என் தாழ்மையான கருத்து.
இவர் ஆற்றுகின்ற உரைகள் எல்லாம் அனைத்து தமிழ் தொலை காட்சிகளில் ஓளிப் பரப்பப் படுகிறது. இந்த மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை மாணவ – மாணவியர்களும், குடும்பத்தினர் அனைவரும் கண்டுகளித்து நம்முடைய மனதில் தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.எதிர் மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறையான சிந்தனை களுடன் நாம் செயல் படலாம்.இவரைப் பின்பற்றினால் ஒளி மிகுந்த எதிகாலம் வரும் தலைமுறைக்கும், இப்போதுள்ள தலைமுறைக்கும் நிச்சயம் கிடைக்கும்.
இவரை நான் நேரில் பார்த்தது கிடையாது.இவர் பள்ளி கல்லூரிகளில் ஆற்றும் சொற்பொழிவுகளையும், தினசரி வரும் ஏடுகளிலும், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றுக்கு அளிக்கும் பேட்டிகளையும் மட்டும் படித்தும், பத்திரிகையில் வெளிவரும் இவரது தொடர்களையும் படித்துதான் இவரை நான் தெரிந்து, புரிந்து கொண்டு எழுதியதுதான் மேற்கண்ட கட்டுரை.
தினசரி நாளிதழ் முதல் தரத் தமிழக நாளேடு தினத்தந்தியில் வெளியாகும் இவரது கட்டுரையைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.வரும் தலைமுறைக்கு மட்டுமல்லாது இன்றைக்கும் இருக்கும் நமக்கும் மிகவும் பயன்படும் இறையன்புவின் கட்டுரை நம் அனைவரையும் நல் வழி படுத்தும்.
இப்பொது இந்தியாவின் முதல் தரப் பத்திரிகை தினத்தந்தியில் ஞாயிறுன்று வெளியாகும் ஞாயிறு மலர் பகுதியில் 17-2-2013-ன்று முதல் நமது இறையன்பு அவர்கள் எழுதும் தொடர்
" உலகை உலுக்கிய வாசகங்கள் தொடரை வாசியுங்கள்.
சனிக்கிழமையன்று உங்கள் அருகில் இருக்கும் பத்திரிகை விற்பனை மையத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். வளமான வாழ்கையை கண்டுகொள்ளுங்கள்.
இவரைப் பற்றிக் கட்டுரை எழுதுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
என் அடுத்த கட்டுரை இவரைப்பற்றித்தான் இவர் தன் சொற்பொழிவுகளிலும் இவரெழுதிய நூல்களிலிருந்தும் சொன்ன சொல்களை மேற்கொள் காட்டி என் அடுத்த கட்டுரை தொடங்கும்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்