Type Here to Get Search Results !

தினத்தந்தியின் நெத்தியடி தலையங்கம் .


இதற்கு 16 இல்லையா ; நிர்பயா கேட்பார் !



8-3-2013-வெள்ளிகிழமையன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் பெண்களால் சிறப்பாக, பெருமைமிக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டடப்படுவதன் தொடக்கமே, தங்களுக்கும் சமஉரிமை வேண்டும் என்று 1908-ம் ஆண்டு, நியூயார்க் நகரில் 15 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றதுதான்.அதன் பிறகு, 1909-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்காவில் தேசிய மகளிர் தினம் முதலாவதாகக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1910-ம் ஆண்டில் சர்வதேச பெண்கள் மாநாடு கோப்பன் ஹேகனில் கடைப்பிடிக்கப்பட்டது. பின்பு முதலாம் உலகப்போர் நேரத்தில் ரஷ்யபெண்கள் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும். அதுவும் உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மார்ச் 8 –ந்தேதியை உலக மகளிர் தினமாக நிர்ணயித்தனர். இந்த நாளைப் பெண்கள், 
“ மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற உணர்வோடு பெருமையாகக் கொண்டாடிக் கொண்டுருக்கிறார்கள்.

டிசம்பர்  16 என்றாலே, இந்திய வரலாற்றில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு சோக நாள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அன்றுதான்   டெல்லியில் 22-வயதுள்ள பிசியோதெரபி மாணவி நிர்பயா (கற்பனை பெயர்) ஓடும் பஸ்சில் 6 காமுகர்களால் கற்பழிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நாள்.அந்த 6 பேர்களையும் எதிர்த்துப் போராடிய அந்த வீரமங்கை, கொடிய மிருங்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரணம் அடைந்த நாள். சர்வேதேச மகளிர் தினத்தையொட்டி, அமெரிக்கா, துணிச்சல் மிக்க நிர்பயாவுக்கு சர்வேதேச துணிச்சல் மிக்க பெண் என்ற உயரிய விருதை வழங்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா இன்று இந்த விருதை வழங்குகிறார். இதற்கான குறிப்புரையில், நிர்பயாவின் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிய  துணிச்சலைப் பற்றிக் குறிப்பிடும்போது உயிர்க்கு போராடிய நிலையிலும் இருமுறை போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததையும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டதையும், அவர்கள் தண்டிக்கப்படுவதைப் பார்பதற்காக, தான் உயிர் பிழைக்க வேண்டும் என்று கூறியதையும், அமெரிக்கா குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த 6 காமுகர்களில் குடிபோதையில், நிர்பயாயை மிகக் கொடுரமாக இருமுறை கற்பழித்ததுடன், சொல்லக்கூடாத இடங்களில் இரும்புக் கம்பியைச் சொருகி சித்திரவதை செய்தவன்  18 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் காமுகன். நிர்பயா  மரணபடுக்கையில் விரும்பியதற்கு மாறாக, அந்தக் கொடுரன் 18 வயதுக்குக் குறைவானவன் என்ற கவசத்தை வைத்துக்கொண்டு, ஒரு சில மாதங்கள் மட்டும் சிறுவர்களுக்கான சீர்திருத்த பள்ளியில் இருந்துவிட்டு, மறுபடியும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வெளியே வந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அவன் செய்த கொடூர செயல் மற்றவர்களைவிட அதிபயங்கரமானது. என்றாலும் 18 வயதுக்குக் குறைந்தவன் என்று சொல்லி, அவன் தப்பித்துக் கொள்ளவதற்கான கதவுகளை, நமது சட்டம் திறந்து வைத்துக் கொண்டிருக் கிறது.இந்தக் கதவை அடைக்க வேண்டும்.

இளஞ்சிறார் என்ற வயது வரம்பை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்திருக்கிறது.உச்சநீதிமன்றமும் "இது தொடர்பாக, மத்திய அரசாங்கம் மார்ச் 29 –ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறி இருக்கிறது. ஆனால் மத்திய பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் மேம்பாட்டு மந்திரி கிருஷ்ணா தீரத், ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, இப்போதுள்ள சட்டத்தில் இருக்கும் வயது வரம்பைக் குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்.இவ்வளவுக்கும் ஜனவரி மாதம்  4–ந் தேதி நடந்த மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில், இந்த வயது குறைப்புக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மனம் ஒத்து செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான வயது வரம்பை, 18 -ல் இருந்து 16 ஆகக் குறைக்கும் வகையில், மத்திய அரசாங்கம் கொண்டு வர இருக்கும் சட்டத் திருத்தத்தில் சாராம்சம் இருப்பதாக இப்போது செய்தி வந்துள்ளது. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு 16- வயது என்று சொல்லிவிட்டு, கொடூர கற்பழிப்பில் ஈடுபடுபவர்களின் வயது வரம்பை மட்டும்  18 – ல் இருந்து குறைக்க மாட்டோம் என்று சொன்னால், சொர்க்கத்திலிருந்து நிர்பயா நிச்சயமாகக் கேட்பார்.” இதற்கு மட்டும் என்றால், என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தண்டிக்க மட்டும் 18 – ல்  இருந்து குறைக்க மாட்டேன் என்று சொன்னால், அது என்ன நியாயம் ?  என்பார். சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும்போது, கண்டிப்பாக, நமது            எம்.பி.க்கள், வயது வரம்பைக் குறைக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad