Type Here to Get Search Results !

தினத்தந்தியின் நியாமான தலையங்கம் .


நடுத்தர மக்களை நசுக்கா தீர்கள்.

தினத்தந்தியின் நியாமான தலையங்கம்

என்னதான் சமத்துவ சமுதாயம், சமதர்ம சமுதாயம் என்று பேசினாலும், நாட்டில் செல்வந்தர்கள், நடுதரமக்கள், ஏழைகள் என்று மூன்று பிரிவுகளும், அதற்குக் கீழ் கிளைபிரிவுகளும் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. விலைவாசி உயர்வு என்றாலும் சரி, ருபாய் மதிப்பு விழ்ந்தாலும் சரி, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் சரி இந்த மூன்று பிரிவுகளில் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான்.

 ஏன் எனில் அவர்களுடைய வருமானத்தில் ஒரு அரசாங்கம் போடும் பட்ஜெட்டைப் போல, மாதந்திர பட்ஜெட் மொத்த வரவு இவ்வளவு, அதில் வீட்டு வாடகை அல்லது சொந்த வீ ட்டிற்காக வாங்கிய கடனில் திருப்பிச் செலுத்தும் தொகை இவ்வளவு, சாமான்கள், மருத்துவ செலவு, கல்விச்செலவு, போக்குவரத்து செலவு, துணிமணி உள்பட தினமும் ஆகும் செலவு எவ்வளவு என்று பட்டியலிட்டு, வரவுக்கும், செலவுக்கும் மீதமுள்ள தொகையை எதிர்பாராத செலவுக்கும், சேமிப்புக்கும் வைத்துகொள்வார்கள்.

 

இதில் எந்தசெலவையும் அவர்களால் தவிர்க்க முடியாது.சமீபத்தில் அரிசியில் தொடங்கி, வரை விலை உயர்ந்து விழி பிதுங்கிப் போய் நிற்கிறார்கள். பணவீக்கத்தின் தாக்கத்தால்தான் விலைவாசி உயர்கிறது என்பது பொருளாதாரம் படிக்காத சாதாரண மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.இதைத்தான் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி ப. சிதம்பரம் கூறும்போதுநாட்டின் வளர்ச்சியைப் பெருக்க நாங்கள் எடுக்கும் முயற்சிகளூக்கு பணவீக்கம் தான் பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்திய நாட்டின் வளர்ச்சிக்கே பணவீக்கம் அச்சுறுத்தலாக இருந்தால், ஒரு குடும்ப பட்ஜெட்டில் பணவீக்கம் எந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.மாதாந்திர பட்ஜெட்டில் எந்தச் செலவைக் குறைத்தாலும், செலவை அவர்களால் நிச்சயம் குறைக்கவே முடியாது.இது நடுத்தர மக்களுக்கு மட்டுமல்லாமல் அடிமட்டத்தில் சற்று மேல்நிலையில் உள்ள ஏழைகளுக்கும் பொருந்தும். ஏனெனில், அவசரமான இந்த உலகத்தில் இப்போதெல்லாம் சாதரண கூலி தொழிலாளி கூட மொபட்டில்தான் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது.பல தொழில்களை இருசக்கரவாகனத்தில் செய்ய வேண்டும்.இதுபோலத்தான் நடுத்தர மக்களுக்கு மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மோப்பெட்டுகள், ஆட்டோ ரிக்சாக்கள், சில உயர்தர, நடுத்தர வகுப்பினருக்கு சிறிய வகை கார்கள் என்பது தினசரி பயன்பாட்டிலிருந்து நிச்சயமாகப் பிரிக்கமுடியாத அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

 இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் மத்திய அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று வந்தபிறகு அடிக்கடி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு அதன் வலியால் இந்த மக்கள் துடிக்கிறார்கள், துவள்கிறார்கள்.பிப்ரவரி 16- ந் தேதிதான் பெட்ரோல் விலை ரூ 1.50 உயர்த்தப்பட்டது.இதில் விற்பனைவரி, மதிப்புக் கூட்டுவரி இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு ருபாய் 91 காசுகள் உயர்த்தப்பட்டன. டீசல் விலை 45காசுகள் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டாலும், இந்தக் கணக்கை எல்லாம் சேர்த்து 55காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 இப்போது தீடிரெனப் பெட்ரோல் விலை 1.40 உயர்த்தப்பட்டுள்ளது.வழக்கம்போல வரிகளை எல்லாம் கூட்டினால் ரூ 1.78 ஆகிறது. இதற்குக் காரணமாகச் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, அமெரிக்க டாலருக்குஇணையான ரூபாயின் மதிப்பு குறைந்தது விட்டது என்று கூறுகிறார்கள்.இந்தக் காரணங்கள் எல்லாம் அரசாங்கத்துக்குத்தான் புரியுமே தவிர,  சாதாரண குப்பன் சுப்பனை பொறுத்தமட்டில் அவன் அறிவது அவனுடைய பையில்இருந்து செல்லும் பணம்தான். டீசல் விலை இன்னும் உயரப்போவதாகப் பயங்காட்டுகிறார்கள். இப்படிஎல்லா பொருட்களின் விலையுமே உயர்ந்தால் நிச்சயமாகப் பொதுமக்களால் தாங்கவே முடியாது. போதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.இதோடு கடைசியாக இருக்கட்டும். முடிந்தால், விலையைக் குறைக்க என்னவழி இருக்கிறது என்று பாருங்கள். இல்லையென்றால், தங்க  விலை உயர்வோடு நிறுத்திக்கொள்ளங்கள். இனிமேலும், தாங்க முடியாது. எங்கள் கையிலிருந்து போடும் பணத்திற்குப் பதிலாக அரசாங்கமே இந்த உயர்வைத் தாங்கிக்கொள்ள வழியிருக்கிறதா ? என்று பார்ப்பதுதான் இப்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாகும் என்கிறார்கள் நடுத்தரமக்கள்.




05-03-2013-ன்று தினத்தந்தியில் வெளியான தலையங்கம். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad