“ அழகான கூந்தல் “
கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடுதொடர்புடையது. இது முக்கிய அம்சமாகக் கருதப்படுவதால் தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளும் கிருஸ்தவ மத சகோதரிகளும் தங்களின் அழகை மறைக்கக் கூந்தலை சுத்தமாக மழித்துவிட்டோ
அல்லது முக்காடிட்டு மறைத்துக் கொண்ட வாழ்கின்றனர்.
கூந்தலானது கவர்ச்சியான அழகைதரக்கூடியது.
தலையின் மீது கருகரு வென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்தப் பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்தப் பெண்ணையத்தான் பார்க்கின்றனர்.
அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அதுமென்மையைஉணர்த்துகிறது. பெண்ணின்தைரியத்தைகாட்டுகிறது. அனைவருக்கும் கவர்ச்சியான அழகையும் தருகிறது.
கூந்தலானது கண்களைக் கவர்கிறது. எத்தனையோ டிசைன்களில் நகைகளை அணிந்தாலும்
கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்றுகுறைச்சலாகத்தான் இருக்கும்.
கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாகக் கருதப்படுவதால் தான் பண்டையகாலங்களில் கணவனை இறந்த பெண்களின் கூந்தலை மழித்துத் தலையில் முக்காடிட்டு
வந்துள்ளனர்.
புத்தமதம், ஜைனமதத்தை தழுவியவர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும்
மழித்துக்கொண்டனர். இதன் மூலம் தங்களின் அழகை பிறருக்கு காட்சிப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவையைக் கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்
.... .
கார் மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை
அணிந்திருந்தாலும் அந்தக் கூந்தல் அழகே அவளைப் பேரழகியாகக் காட்டும் அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு
அனைவரும் முக்கியத்துவம்
கொடுக்கின்றனர்.
அதே போல் அதிக அளவில் கவலை ஏற்பட்டாலோ மனஅழுத்தம்
இருந்தாலோ கூந்தல் உதிரத்தொடங்குகிறது. நமது மன ஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.
மேலும் படிக்கக் கீழே தலைப்பில் சுட்டவும்
கூந்தல் நீண்டு வளர
கருத்துரையிடுக
0 கருத்துகள்