சக்திகள்.
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலைக் கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
சக்தி
இல்லையே சிவம் இல்லை
இது சான்றோர் வாக்கு
மாதா பிதா குருத் தெய்வம்
முதலில் உலகத்தில் சக்திக்குத்தான் முதலிடம்
எந்த நேரமும் எந்நாளும் சக்தியை வணங்குவோம்
சக்தி
இல்லையேல் இவ்வுலகம் இல்லை.
நம்மை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்த சக்தி அன்னையாய் !
இல்லத்தை அறவழியில் நடத்தும் சக்தி தலைவியாய் !
கல்விசாலையில் கற்றுக் கொடுக்கும் கல்வியை
கற்பிக்கும் சக்தி ஆசிரியையாய்!
ஒழுக்கம் என்ற சொல்லுக்குசதி உருவமாய் !
சினம் கொண்டு எழந்தால் எதிர்க்க இயலாத
எரிமலையாய் !
இரக்கத்திலே மானுடத்தின் உண்மையாய் !
தான் உண்ணாது தம் பிள்ளைகளைக் காக்கும் சக்தி கடவுளாய் !
நேற்றல்ல இன்றல்ல காலங்கள் தோறும்
போற்றவேண்டிய
போற்றி காக்கவேண்டிய காத்து மதிக்க வேண்டிய
மதித்து வணங்க வேண்டிய இப்பூவுலகின் புனிதம் சக்தி பெண்கள்.
08-03-2013-ன்று மகளிர் தினம்.பெண்மையை போற்றுவோம்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்