Type Here to Get Search Results !

சுஜாதாவின் நேர்கொண்ட பார்வை.


என் முக நூலில் எழுத்தாளர் சுஜாதாவின் பக்கம் 

சிகரெட் பழக்கம் கை விடுவதற்கு ! - சுஜாதா


சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சிகரெட் பழக்கம் என்பது பைனரி. சாதி இரண்டொழிய வேறில்லை... சிகரெட் பிடிப்பவர். பிடிக்காதவர். குறைவாகப் பிடிப்பவர், எப்போதாவது பிடிப்பவர் இதெல்லாம் ஏமாற்று. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிடவேண்டும்.


இருபதிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் த.தானே ஏமாற்றிக் கொள்வது. தப்பாட்டம்முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும். இந்த இம்சை தேவைதானா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்கவேண்டும்..

சிகரெட்டுக்குப் பதில் பாக்கு, பான்பாரக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. யாரையாவது அடிக்க வேண்டும்போல் இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே உதைப்பதற்கு ஒரு கால் பந்தும் சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக்கொள்ளலாம் (கண்கள் ஜாக்கிரதை). ஒரு வாரம் ஆனதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப் படங்கள்போல் வெற்றிகரமான பத்தாவது நாள், பதினைந்தாவது நாள். சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம். இப்படி! ஆனால் இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காக பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக்கொள்வதும் விஷப் பரீட்சைகள்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad