Type Here to Get Search Results !

சிரிப்பு


உமது சிரிப்பு தெய்வீக சிரிப்பு 
உமது சிரிப்பு மழலையின் சிரிப்பு 
உமது சிரிப்பு கள்ளமில்லா சிரிப்பு

சிரித்தால் வாழ்கையில் இன்பம்

சிரிப்பு இறைவன் நமக்குக் கொடுத்த அற்புதமான வரம்.

நாம்தான் இந்த வரத்தை உபயோகிக்க தவறி விடுகிறோம்

மனிதனை தவிர வேறு எந்த ஜீவராசிகளுக்கும் இறைவன் 

கொடுக்காத வரம். 


அத்தகைய வரத்தை நாம் உபயோகபடுத்துவது மிக மிகக் குறைவு சிரிப்பு என்பது இப்போது அபூர்வம் ஆகி விட்டது. முறைப்பு இப்போது அதிகமாகி விட்டது.


நட்பைக் கண்டால் மறைந்து நிற்பது, உறவைக் கண்டால் தூரத்தில் நின்று தலையை அசைப்பது, வாடிக்கையாளர்களைக் கண்டால் வெறுமனே வரவேற்பது, சிரிப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை.

சிரித்தால் என்ன குடி முழ்கியா போய்விடும் இவர்களுக்கு

 

சிரிப்பில் கூடச் சிந்தனை பிறக்கும் சிந்தனையில் கூடக் கவிதை பிறக்கும். சிரித்து சிரித்து என்னைச் சிறையில் இட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் 


நூற்றில் பத்து பேருக்கு மட்டும் தான் சிரிப்பு என்பது தெரியும்மாம் 

சிரிப்பு கூடப் பசியை  மறக்கடிக்கமாம் எங்கோ புத்தகத்தில் படித்த ஞாபகம்

     

எப்பேர்ப்பட்ட உணர்வுகள் நம் இதயத்தில் சந்தோஷமாகச் சில மணி நேரம் நம்மை ஆட்கொள்ளூகின்றன. நம்மை ஆட்கொள்ளும் மிக முக்கியமான ஒன்று சிரிப்பு. நட்புக்கள், உறவுகள் சந்திக்கும்போது சிரிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சிரிப்பு என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்தும் செயலாகும், சிரிப்பிற்கு நம் வாழ்வியல் நடைமுறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது  உண்மை.சிரிப்பு நம் வாழ்வோடு கலந்த ஒன்று பிரிக்க முடியாத ஒன்று.  


நமூட்டு சிரிப்பு, ஆணவ சிரிப்பு, தெனாவட்டு சிரிப்பு, உதட்டளவு சிரிப்பு இவையெல்லாம் சிரிப்பே அல்ல வெறுப்பை தான் உண்டாக்கும்  இத்தகைய சிரிப்பு. சிரிப்பு என்பது அடிவயிற்றிலிருந்து வலியுடன் வரும் சிரிப்புதான் உண்மையான சிரிப்பு போதும் போதும் இதுக்கு மேல் வவ்று தாங்காது எனச் சொல்லுவரை சிரிப்பதுதான் மெய் 


சிரிப்பதனால் பல விதமான  நோய்கள் மனிதனுக்கு  தெரியாமலே குணம் அடைகிறது என்று பல்வேறு மருத்துவ  ஆராய்ச்சிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றன.


சிரிப்பதற்கென்ற பல சங்கங்கள் இப்போது நடைமுறையில் சிறப்பாகச் செயல்பட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றன.சென்னையில் உலகபுகழ்பெற்ற மெரினா கடற்கரையில் தினம் ஒரு மணி நேரம் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்கிச் சிரித்து கொண்டிருக்கிறார்கள்.


மனம் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு விலகும்     


நாமும் சிரிப்போம் மற்றவர்களையும் சிரிக்க வைப்போம்.


சிரிப்பை முறையாகப் பயன்படுத்தினாலே குறைவு இல்லாமல் வாழலாம்


அடுத்தவர்களைச் சந்தோஷ படுத்தி பார்ப்பது தான் நம் முதல் சந்தோசமாக இருக்கட்டும். கடைசி சந்தோசமாகவும்  இருக்கட்டும்.

சிரி சிரி சிரி ............. சிரித்து வாழ வேண்டும்




சிரித்த முகம் தெய்வம் குடியிருக்கும் இடம் 











கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad