Type Here to Get Search Results !

தங்கமே உன் விலை என்ன ?

தங்கமே உன் விலை என்ன ?



தடுமாற வைக்கும் தங்கம்

“கிடு கிடு”வென்று  உச்சத்தை எட்டி இருக்கிறது தங்கம்.ஆனால் இந்த விலையிலும் தங்கம் தங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை இனி தங்க நகை வாங்குவதே விலை உயர்ந்த கனவாகி விடுமோ என்று தயங்கி தேங்கி நிற்கிறார்கள் நடுத்தர மக்கள் .


தங்கம் பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது அதிகம் படிக்காதவர்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்வதில் நல்லது என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.அதிகமான பணவீக்கமும் நிலைஇல்லாத பங்குச்சந்தையும் தங்கத்தை வரலாறுகாணாத விலை உயர்வை எட்ட வைத்திருக்கின்றன.

கடந்த ஆண்டுடன்ஒப்பிடுகையில் தங்கம் 35சதவிதம் விலை உயர்ந்து இருக்கிறது.இதற்கு நமது மக்கள் மட்டுமின்றி,அமெரிக்கா, ஐரோப்பியநாட்டினரும் தங்கத்தில் முதலீடு செய்யக் காட்டத் தொடங்கிஇருக்கும் ஆர்வம்ஒரு முக்கியக் காரணம்.

பிற முதலீடுகள் ,வங்கிடெபாசிட்கள் போலில்லாமல் தங்கம் ஒரு பொருளாக இருக்கிறது .அதனால் இது கரைந்து போகாதுஎன்ற நம்பிக்கை உள்ளது .வழிவழியாக ,கூடுதல் பணத்தைப் போடும் பொருளாகத் தங்கம் உள்ளது.



அமெரிக்கா பின்னணீ 


அமெரிக்க “பெடரல் ரிசர்வ் “ அமைப்பானது ,ஒரு முக்கியமான வங்கிக் கூட்டத்தில்,புதிய நிதித்துறை ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க முடிவு செய்ததது .அதுதான் தங்க விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று ஓர் ஊகம் நிலவுகிறது .புதியநிதி ஊக்குவிப்புத் திட்டத்தால்,சந்தைக்குள் மேலும் அதிகப் பணம் செலுத்தப்படும் . அதன் விளைவாகப் பணவீக்கம் அதிகமாகி,பொருட்களின் விலை உயரும் . எனவேதான் மக்கள் தங்கள் இருப்பு மதிப்புக் கரைந்து போகாமல் இருக்க தங்கத்தை வாங்குகிறார்கள்,மேலும் வாங்குவார்கள்  என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் .

இந்தியாவில் 

 

ஆனால் இந்தியாவைப்பொறுத்தவரை தங்க இறக்குமதியும்,விற்பனையும் குறையவேசெய்யும் என்று வல்லுனுர்கள் தெரிவிக்கிறார்கள்.நிலைற்ற உலகப் பொருளாதாரம்,பருவமழை ஏமாற்றம்,நாட்டின் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை அவர்கள் காரணமாகக் கூறுகிறார்கள்.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து12சதவீதத்துக்கு மேல் மதிப்பு சரிந்துள்ள ரூபாய்,இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையை மேலும் விசிறிவிட்டுள்ளது.ருபாய் மதிப்புக் குறையும்போது தங்கம் மட்டுமல்ல இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் கூடுகிறது.



சரிந்த இறக்குமதி


இந்த  ஆண்டின் ஏப்ரல் –ஜூன் காலகட்டத்தில் நாட்டின் தங்க இறக்குமதி 56%மேல் குறைந்து 131டன்கள் ஆகிஉள்ளது.அண்மையில் உலக கோல்டு கவுன்சில் வெளியீட்டிருக்கும் அறிக்கையில் தெரிய வந்திருக்கும் தகவல் இது .விலைவாசி மேலும் கூடக்கூட,உலகின் பெரிய தங்க வாடிக்கையாளர்களான இந்தியர்கள் தங்கத்தை மேலும் தள்ளி வைப்பார்கள் என்று நிதி அலசல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.



மழையும் காரணம்

இந்தியாவில்  மூன்றில் இரண்டு பங்கு மக்கள்,அதாவது சுமார் 80கோடிப் பேரின் பொருளாதாரம் நேரடியாகவோ,மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்துள்ளது.இந்நிலையில்இந்த ஆண்டு தாமதமான,பற்றாகுறையான பருவமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கிராமப்புற மக்களின் செலவழிப்பு குறைந்துள்ளது.விவசாயத்தில் குறைந்து போன வருவாயையும்,அதிகரித்த பணவீக்கமும் கிராமப்புற மக்களை தங்கம் போன்ற முதலீடுகளை அதிகம் நாடவிடாமல் செய்துள்ளன.நம் நாட்டில் விற்பனையாகும் தங்கநகைகளில் 60%வாங்குபவர்கள் கிராமப்புறமக்களே என்ற நிலையில் இது முக்கியமான தாக்கம் ஆகும்.


நன்றி : தினத்தந்தி 22-09-2012 - அன்று வெளியான கட்டுரை 


மேலும் தங்கமான கட்டுரைகள் கீழே சுட்டவும்


தங்கசுரங்கம்



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad