சர்வேதேச அளவில் தங்க ஆபரணங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கடந்த பல ஆண்டுகளாக இத்தாலி முதலிடத்திலிருந்து வந்தது.தற்போது முதல் முறையாக இந்தத் தகுதியை அந்நாடு இழந்துள்ளது.மாறாக இந்தியாவும், அமெரிக்காவும் தங்க ஏற்றுமதியில் முதலிடத்திற்கு வந்துள்ளதாக அண்மைக்கால ஆய்வு தெரிவித்துள்ளது.
தங்க ஆபரண நிறுவனங்கள்
இத்தாலி நாட்டில் உலகப் புகழ் வாய்ந்த பல தங்கஆபரண நிறுவனங்கள் உள்ளன. அண்மைக் காலமாக அங்குத் தங்கநகை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் அந்நாட்டின் ஆபரணங்கள் துறையில் உற்பத்தி செலவினம் அதிகரிப்பு மற்றும் வேலையிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்றப்பட்டுள்ளன.இதனால் ஆபர்ணதொழில் மந்தமடைந்து, ஏற்றுமதியும் பாதிக்கபட்டுள்ளது.
இத்தாலியில் தங்க ஆபரணங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் தேவைப்பாடு குறைந்து, நகை விற்பனையும் தேக்கம் அடைந்துள்ளது.இது இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
மேலும் தங்கம் ஏற்றுமதியை பொறுத்தவரை இந்தியாவிலும், அமெரிக் காவிலும் ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள சலுகைகள் அங்கே இல்லை.இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுவரை எவ்வித வரியுமின்றி தங்க ஆபரணங்களை ஏற்றுமதி செய்கின்றனர்.ஆனால் இத்தாலிய தங்க ஆபரண நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது வரி செலுத்த வேண்டியுள்ளது.இதே போன்று ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, இந்தியா மற்றும் பிரேசில் நாட்டு நிறுவனங்கள் குறைவான வரி செலுத்துகின்றனர்.
இத்தாலியில் உற்பத்தி செய்யப்படும் தங்க ஆபரணங்களில் பொதுவாக 70% ஏற்றுமதி செய்யபடுகிறது.30% மட்டுமே உள்நாட்டில் விற்பனை செயப்படுகிறது.விரைவில் அமெரிக்காவிற்கானஏற்றுமதி முன்னேற்றம் அடையும் என இத்தாலி நிறுவனங்கள் எதிர்பார்கின்றன.அதே சமயம் பிரிக் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனாவில் தங்கஆபரணங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பாதிப்பு நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளன.
விற்பனை குறைந்தது
இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இத்தாலியில் தங்க ஆபரண விற்பனை, அளவின் அடிப்படையில் 15% குறைந்து 4.80 டன்னாகச் சரிவடைந்துள்ளது.மதிப்பின் அடிப்படையில் 9%சரிந்து 24.60 கோடி டாலராகக் குறைந்துள்ளது.மேலும் தங்க நகை சில்லறை வர்த்தகம் 20 முதல் 25% வரை விழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிகிறது.அங்குள்ள தங்க ஆபரண தொழில் நிறுவனங்கள்,2011 -ஆம் ஆண்டில் 630 கோடி யூரோ வருவாய் ஈட்டின. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும்16% குறைவாகும்.
நன்றி தினத்தந்தி யில் வெளியான எகனாமிக்டைம்ஸ்.
பொது நலன் கருதி வெளியீடுவோர்
கருத்துரையிடுக
0 கருத்துகள்