Type Here to Get Search Results !

தரமான தங்கம்

தரமான தங்கம்


தரமான தங்கம் கூடுதல் மதிப்பு

தங்கத்தின் மீது ஆர்வம் மிகப்பெரிய அளவு அதிகரித்த வண்ணமே உள்ளது.விலையுயர்ந்து வரும் தங்கத்தின் முதலீடு நோக்கில் அதை வாங்குவதும் அதிகரித்து வருகிறது.சாதாரண மக்களின் நகை ஆர்வம் மற்றும் மதிப்பு மிகுந்த பொருள் சேர்க்கை, என்றவாறு ஆபரண நகை வாங்குவது உயர்ந்தவாறு உள்ளன.எண்ணற்ற ஆபரணங்கள் வேறு பொருள்களில் செயப்பட்டிருந்தாலும் தங்கத்தில் செய்த ஆபரணமே மனதிற்கு மகிழ்வும், ஓர் உயர் மதிப்பைத் தருவதாய் அமைகிறது.

தங்கம் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவோர்க்கு அதன் தரம்குறித்து ஆய்வு செய்யத் தெரிவதில்லை.காரணம் கடைக்காரர் கூறும் அளவு தங்கத்தின் மதிப்பு என்று நம்பிக்கையோடு வாங்கி வருகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் தங்கம் பேப்பர் கோல்டாகக் கூட வாங்குகின்றனர்.அவர்களுக்குத் தங்கத்தின் தரம்பற்றிய ஆய்வு தேவையில்லை.ஆனால் ஆபரணமாக வாங்குவோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தங்கத்தின் தரம்குறித்த ஆய்வு அப்போதுதான் விலை மதிப்பு மிகுந்த தங்கத்தின் முழுமையான மதிப்பு அறிய முடியும்.

தங்கமான முதலீடு



தங்கத்தின் தர மதிப்பீடு

உலகளவில் தங்கம் ஓர் பாதுகாப்பு அம்சம் பொறுந்திய உலகோம்.அதுவே அந்தந்த நாட்டின் நிதி அமைப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் உள்ளது.எனவே தரமான தங்கத்தின் முழுமையான மதிப்பைப் பல்வேறு வகைகளில் கணக்கிட்டு அதன் பெரும் மதிப்பு காணப்படுகிறது.

நகையாக செய்தால்அதன் உறுதிதன்மை மிகக்குறைவு.எனவே தங்கத்தோடு சில உலோகம் சேர்த்து நகை செய்யும்போது அதன் உறுதி பலப்படும்.எனவேதான் தங்கத்தோடு வேறு உலோகம் சேர்க்கப்படுகிறது.


தங்கத்தில் சேர்க்கப்படும் உலோகத்தின் அளவுக்கு ஏற்பத் தங்கத்தின் காரட் மதிப்பு கூறப்படுகிறது.பொதுவாக இந்தியாவில் பெரும்பாலும் 22காரட் என்ற தங்கநகைகளே அதிகம் விற்கப்படுகிறது.


காரட் வகையும் அதன் மதிப்பும்.

காரட் எனப்படும் தங்கமதிப்பீடு பலநாடுகளில் பலவகைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன.ஆனாலும் அந்தக் காரட் ஏற்பவே தங்கத்தின் மதிப்பு இருக்கும்.குறிப்பாக 9காரட் தங்கத்தில் 37.5 % தான் தங்கம் இருக்கும்.அதுவே 10carat தங்க நகையில் 41.7 % மும் 14 காரட் தங்கத்தில்58.5 % மும் 18காரட் தங்கநகையில்75 % தங்கமும் 22 காரட் தங்கநகையில்  91.6 % தங்கமும் இருக்கும்.இதுவே அந்தந்த காரட் நகையில் தங்கமதிப்பை அறிய செய்யும்.


அமெரிக்கநாடுகளில் 14காரட் மற்றும் 10காரட் தங்கநகையே அதிக உபாயோகப்படுத் துகின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 18காரட்  தங்கநகைகள் பிரபலம்.அந்தந்த நகையின் காரட் குறித்த தகவல்கள் அந்த நகையின் உட்பகுதியில் குறித்து இருக்க வேண்டும்.அந்தத் தரத்தை நிர்ணிக்கவே “ஹால்மார்க்” என்ற அமைப்பு உள்ளது.இந்தத் தரச் சான்று உள்ளதா என்பதை சோதித்து நகை வாங்குவது மிகச் சிறப்பாக இருக்கும்.


தங்க நகை மதிப்பும் சிறப்பான மகிழ்ச்சியும்

தங்கம் ஓர் குடும்பத்தின் செல்வ செழிப்பை காட்டும் மிகப்பெரிய அடையாளமாய் திகழ்ந்துதான் வருகிறது.அது இன்றைக்கும் மிகப்பெரிய அளவு வளர்ச்சியடைந்து வருகிறது.அந்தத் தங்கநகை வாங்குவோர் அதன் தரமும் மதிப்பும் குறித்த விழிப்புனர்வே இருத்தல் வேண்டும்.நிறைய நகை கடைகளில் பீயுரிட்டி இயந்திரங்கள் உள்ளன.அதில் நாம் கொடுக்கும் நகையும் வாங்கும் நகையின் மதிப்பைப் அறிய நன்கு பயன்படுகின்றது.அதுவே  22 காரட்  நகையே மட்டுமே அதிக விரும்பிய காலம் குறைந்தே வருகிறது.தற்சமயம்14 காரட் 18 காரட்நகைகள் நிறைய கடைகளில் மதிப்புக்கு ஏற்ப விலை குறைவாகவே கிடைக்கிறது.இதனை இளைய சமுதாயம் நிறைய விரும்புகின்றன.


தங்கத்தின் மதிப்பை அறிந்து அதற்குரிய மதிப்புக்குரிய விலை கொடுத்து வாங்கும்போது நமக்கு மனநிறைவும் மட்டற்ற மகிச்சியும் கிடைக்கும்.சொக்க தங்கம் பார்த்துச் சொக்கியது போகக் காரட் மதிப்புக்கு ஏற்பத் தங்க நகை வாங்குவோம்.தரமான தங்கத்தை அறிவோம்.

நன்றி   27-07-2012 - அன்று வெளியான தினத்தந்தி யின் கட்டுரை.

படிக்காதவர்கள் வலைப்பூவில் படித்துக் கொள்ளுங்கள்.

பொது நலன் கருதி வெளிடுவோர்


மேலும் தங்கமான விவரம் கீழே சுட்டவும் 



















கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad