தங்கத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் ?
தங்கத்தை நமது மக்கள் அணிந்து கொள்ளும்
நகைகளாகவே வாங்கி வந்தனர்.இதன் மூலம் தங்கம் அதிக நுகர்வு கொண்ட நாடாக இந்தியா
உள்ளது.ஆனால் இதன் பயன்அனைத்தும் வாங்கும் மக்களைச் சென்றடைவதில்லை.எப்படியெனில்
தங்கத்தை நகையாக வாங்கும்போது அதில் செய்கூலி, சேதாரம் போன்ற வகைகளில் தரும்
கூடுதல் பணம், மற்றும் அதனைத் திரும்ப நாம் மாற்றும்போது ஏற்படும் இழப்பு
போன்றவையோடு தங்கநகைகளை உடனே பணமாக மாற்றுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இன்றைய அளவில் தங்கம் நகைகளாக வாங்குவதைவிட
அதனை முதலீட்டு நோக்கோடு வாங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும்.காரணம் முதலீட்டு
நோக்கில் நாம் வாங்கும் தங்கம் வேண்டும்போது பணமாகக் கிடைக்கவும் அதிக வருவாய்
தருவதையும் உறுதிசெய்கிறது.
தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்குவது என்பது
தங்ககட்டியாக வாங்குவது எனச் சிலர் நினைப்பது தவறு.அதுபோலத் தங்ககட்டியாக வைப்பது
மிகவும் ஆபத்தானது.இதனைப் பாதுகாப்பது சிரமம்.அதனை விற்பதற்கும் மிகுந்த சிரமம்
ஏற்படும்.
எவ்வாறின்றி தங்கத்தை சுலபமாக முதலீட்டு
நோக்கில் பேப்பர் கோல்ட் –ஆக வாங்கலாம்.
அதற்கான சில வழிமுறைகள்.
ஈக்கோல்ட்.
ஈக்கோல்ட் எனும் மின்னணு ஆவண தங்கத்தை
என்.எஸ்.ஈ.எல்.(N.S.E.L.)என்ற நேஷனல் ஸ்டாப்
எக்ஸ்சேஞ்சின் முன்பேர வர்த்தக சந்தையின் மூலம் வந்கிட முடியும்.என்.எஸ்.ஈ.எல்.
பதிவு பெற்ற நிறுவனங்களிலும் இந்தத் தங்க முதலீடு “ஈக்கோல்ட் திட்டத்தில் முதலீடு
செய்யலாம்.அதற்கெனத் தனிப்பட்ட “டி மேட் கணக்கு வசதி தேவைப்படும்.ஒரு கிராம்
தங்கம் என்பது அங்கு ஒரு “ஈக்கோல்ட்”யுனிட்
எனப்படும்.இதன் நேரம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து
இரவு பதினோரு மணிக்கு முடிவடையும்.இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கோவோ விற்கவோ
முடியும்.என்.எஸ்.ஈ.எல் –ன் அங்கீகரிக்கப் பட்ட மையங்களில் 999 தரத்திலான தங்கமாகவோ அல்லது ரொக்கமாகவோ வாங்கி கொள்ளலாம்.இதன் மூலம் நமக்குத் தேவைப்படும்போது லாபகரமாக விற்கவும், வாங்கவும் வழிவகை செய்கிறது.ஈக்கோல்ட் திட்டம்.
கோல்ட்
ஈ.டி.எப்.
பங்குகளை வாங்கி டி மேட் கணக்கில் வைப்பதுபோல்
இத்திட்டத்தின் மூலம் தங்கத்தை யுனிட் டு களாக டி மேட் கணக்கில்
சேமிக்கலாம்.பரஸ்பர நிதி நிறுவனங்களின் மூலம் கோல்ட் ஈ.டி.எப். திட்டம் அறிமுகப்படுத்தி
நிர்வகிக்கப்படுகிறது.ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் என்ற போதிலும் சில நிதி
நிறுவனங்கள் 1/2கிராம் ஒரு யூனிட் என்ற
வகையில் குறைந்த அளவு முதலீட்டும் செய்ய வழி வகுத்துள்ளன.
பங்கு முதலீடுகளை விற்பது போன்று கோல்ட்
ஈ.டி.எப்.திட்டத்தின் யூனிட்களை விற்கவும் வாங்கவும் முடிகிறது.தங்கத்தின் தாரம் பற்றிக் கவலையும், ஆவண வடிவில்லான தங்கம் என்பதன் பாதுகாப்பு குறித்த கவலையும் நமக்குத் தேவையில்லை.நகையாக வாங்கி மூன்றோண்டுக்குள் விற்றால் மூலதன ஆதாய வரி செலுத்த
வேண்டும்.ஆனால் கோல்ட் ஈ.டி.எப்.திட்ட முதலீட்டிறக்கு ஓராண்டு என்பது சிறப்பான
அமசம்மாகும்.
தங்க நிதி திட்டம்.
கோல்ட் பண்ட்ஸ் எனும் தங்க நிதி திட்டங்கள்
பரஸ்பர நிறுவனங்கள்மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.ஆனால் இதற்கு டி மேட் கணக்கு
தொடங்க வேண்டும்.தங்கத்தின் சந்தை விலைக்கேற்ப திட்டத்தில் நிகர சொத்து மதிப்பு
கணக்கிடபப்படும்.ஆயினும் நிதி நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள் ஒன்றுக்கு ஒன்று
வேறுபடும்.இதிலேயே “பண்ட் ஸ் ஆப் பண்ட்ஸ் “என்ற திட்டமும் உள்ளது.இதன் மூலம்
பெறப்படும் நிதி முதலீடு இதர பரஸ்பர நிதி நிறுவன கோல்ட் ஈ.டி.எப்.திட்டத்திலும்
முதலீடு செய்யப்படும்.இதனடிப்படையில் நிகர சொத்து மதிப்பு கணக்கிடப்படும்.இதனைக் கொண்டே யூனிட் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.
மேற்கூறிய திட்டமுதலீடுகள் குறித்த பல்வேறு
அம்சங்களை நிறுவனத்தின் மூலம் அறிந்த பின்னர் முதலீடு செய்ய வேண்டும்.இத்திட்டங்களில் பங்கு முதலீடுகளுக்குத் தருவது போன்ற இலவச யூனிட் கள் மற்றும் பிவிடென்ட் தரப்படாது.தங்கத்தின் உற்பத்தி
தேவையடிப்படையில் நிகழும் சந்தை ஏற்ற இறக்கத்தைக் கருத்தில் கொண்டே இதன் விலையும்
இருக்கும்.
தங்கம் விலையேறிவரும் வேளையில் அதனை முதலீடு
அடிப்படையில் இவ்வாறு இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம்
கிடைப்பதோடு, பாதுகாப்பு ஆகவும் திகழும்.
மேலும் தங்கமான விவரம் கீழே சுட்டவும்
நன்றி தினத்தந்தி 23-10-2012
கருத்துரையிடுக
0 கருத்துகள்