ரெயில் பயணத்தில் முன் பதிவு செய்த பயணிகளிடம் அசல் அடையாள அட்டை கேட்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் கோவை நுகர்வோர் குரல் அமைப்பின் செயலாளர், என்.லோகு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் யாரும் அடையாள அட்டை காட்ட அவசியம் இல்லை.தட்கல் முறைமூலம் பயணச்சீட்டு எடுப்பவர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கும்போது அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.
நோட்டரி முத்திரை.
ஆனால் முன் பதிவு செய்த அனைவருமே பயணம் செய்யும்போது, அசல் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்ற அறிவிப்பை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.சிறுவர்கள், சமுதாயத்தின் பின்தங்கிய மக்கள், பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களூக்கு அடையாள அட்டை இருக்காது.இவர்கள் ரயிலில் பயணிக்க முடியாமல் போய்விடும்.
எனவே அனைவரையும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது சட்டவிரோதமானது.புதிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு நீண்ட நடைமுறையைப் பெருத்த செலவில் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.எனவே நோட்டரி வக்கீலின் முத்திரை அல்லது அத்தாட்சி பெற்ற (கெசட்டட்)அதிகாரியின் கையெழுத்திட்ட நகலைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம்.எனவே ரெயில் பயணத்தில் முன்பதிவு செய்த பயணிகளிடம் அசல் அடையாள அட்டையைக் கேட்டு வற்புறுத்துவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி.
இந்த வழக்கைத் தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர்.அவர்கள் பிறப்பித்த உத்தரவுபின் வருமாறு.
பொதுமக்களுக்கென்று தரப்பட்ட முன்பதிவு வசதியைத் தவறாகப் பயன்படுத்துவதை சோதனையிடவும் அதை ஒழிக்கவும் ரெயில்வே துறைக்கு முழு அதிகாரம் உண்டு.இதற்கான திட்டமும், அதுப் போன்ற நல்ல நோக்கத்துக்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.
மேற்கண்ட தகவல் 11-1-2013-ன் று தினத்தந்தியில் வெளியானது.
தினத்தந்தியில் படிக்காதவர்கள் என் வலைப்பதிவில் படித்துக் கொள்ளலாம்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்