வங்கி சாரா நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி. எம்.அமைக்க ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி வழங்கியது.இதுகுறித்து நாமும் தெரிந்து கொள்வோம்.
ஒயிட் லேபிள் ஏ.டி.எம். என்றால் என்ன ?
பெரும்பாலான தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரங்கள் (ஏ.டி.எம்.) வங்கிகளுக்குச் சொந்தமானவை.அதே சமயம் வங்கி சாரா நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஏ.டி.எம்.எந்திரங்கள், ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.என்று அழைக்கப்படுகிறது.இது வங்கிகளால் நிருவகிக்கப்படும் ஏ.டி.எம். போன்றே செயல்படும்.
வங்கி சாரா நிறுவனங்களுக்கு ஏ.டி.எம். அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததற்கு என்ன காரணம் ?
வங்கிகள் நாடு முழுவதுமாக 87,000-ஏ.டி.எம். மையங்களை அமைத்துள்ளன.இந்த வங்கிகளால் நாட்டில் உள்ள எந்த இடத்திலும்
ஏ.டி.எம். அமைக்க முடியும்.இருப்பினும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏ.டி.எம்.மையங்கள் மிகவும் குறைவாக உள்ளன.இதற்குத் தீர்வு காணும் வகையில் வங்கி சாரா நிறுவனங்களுக்கு ஒயி ட் லேபிள் ஏ.டி.எம். அமைக்கப் பாரத ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.இருப்பினும் இந்நிறுவனங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் குறிப்பிட்ட விகிதத்தில் ஏ.டி.எம்.கள் அமைக்க வேண்டும்.இந்த விகிதாச்சார அளவை ரிசர்வ் வங்கி இன்னும் நிர்ணயம் செய்யவில்லை.
ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்கப்படுவதால் அதிக மக்கள் ஏ.டி.எம். வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.வங்கிகளின் ஏ.டி.எம்மைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்.அதே சமயம் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.-களில் இந்தச் சலுகை கிடையாது.ஆனால் வங்கி சாரா நிறுவனங்களூக்கு வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பரிவர்த்தனை கட்டணத்தைப் பிடித்தம் செய்ய அனுமதி கிடையாது.இந்தப் பரிவர்த்தனை கட்டணம் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.-களின் திரைகளில் காண்பிக்கப்படும்.வாடிக்கையாளரின் வங்கி தனியே இந்தக் கட்டணத்தை வசூலிக்கும்.
ஒயிட் லேபிள் ஏ.டி.எம். குறித்த நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது ?
முத்தூட் பைனான்ஸ் மற்றும் பிரிசம் பேமண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.-களை அமைக்க முன் வந்துள்ளன.என்.சி.ஆ ர்., டி போல்டு மற்றும் ஏ.ஜிஸ் உள்ளிட்ட ஏ.டி.எம்.எந்திரம் தயாரிக்கும் நிறுவனங்களூம் இந்த மையங்களை அமைக்க விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில் கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்.-கள் உள்ளன.
இந்த விவரங்கள் அனைத்தும் 12-12-2012-அன்று வெளியான தினத்தந்தியில் the economic times –பக்கத்தில் சங்கீதாமேத்தா மும்பை என்பவரால் எழுதப் பட்ட கட்டுரை.
படிக்க முடியாதவர்கள் இந்த வலைப் பூக்களில் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கருத்துரையிடுக
0 கருத்துகள்