வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கும்போதும், கடன் வழங்கும் போதும் “வாடிக்கையாளர்களை அறிதல் என்ற நடைமுறையை வங்கிகள் பின்பற்றுகின்றன.இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.
“ஒரு செட் அடையாளச் சான்று “ஒரு செட் இருப்பிடச் சான்று என்ற வகையில் நாங்கள் தற்போது விதிகளைத் தளர்த்தியுள்ளோம். அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று இரண்டும் சேர்ந்த மாதிரி ஒரே ஆவணம் இருக்கிறதா, அதை ஏற்க முடியுமா என்பதைக் குறித்து நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்.உதாரணத்துக்கு ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் கூறலாம்.என்கிறார் ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் எச்.ஆர்.கான்.
வாடிக்கையாளரின் அடையாளம், முகவரி-ஐ சரிபார்ப்பதற்காகத் தற்போது வங்கிகள் பல்வேறு “செட் சான்றுகளைக் கேட்கின்றன.
இந்நிலையில் இந்த விஷயம் தொடர்பான தங்களின் புதிய வழிகாட்டுதல் விரைவில் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என்றார் கான். வாடிக்கையாளர்கள், வங்கிகளுக்குத் தங்களின் புதிய முகவரிச் சான்றைச் சமர்பிப்பதற்கு ஆர்.பி.ஐ.கூடுதல் கால அவகாசத்தையும் வழங்கியிருப்பதாகக் கான் கூறினார்.பேங்க் எக்னாமிஸ்ட் கான்பரன்சில் (bank economist confrance)இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார்.
“ஒரு வாடிக்கையாளர் தனது இருப்பிடத்தை மாற்றுகிறார் என்றால் அவர் வேறொரு இருப்பிடச் சான்று வழங்க ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்படும்.அந்த ஆறு மாத காலத்துக்கும் பழைய முகவரியிலேயே வங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாம்.என்றும் கான் கூறினார்.
மேற்கண்ட இத்தகவல் 15-12-2012- அன்று “தினத்தந்தி”-யில்
“நிதி ஆலோசனை” என்ற தலைப்பில் வெளியானது
கருத்துரையிடுக
0 கருத்துகள்