Type Here to Get Search Results !

கன்னி முயற்சி கவிதைகள்

கன்னி முயற்சி கவிதைகள்


கடற்கரை கவிதை

கடலோர
காற்றில்
கரையோர மணலில்
காலாற நடந்து
கற்பனையாய்
கவிதைக்காக
காத்திருந்து
கடற்கரை
காதலில்
கரைந்துதான் போனேன்

கடல் காற்றை ரசிக்க
காதோர
கதவுகளை விரித்தேன்
காற்றினில் வருவது கீதம்தான்
காற்றின் மெல்லிய இசை
கௌரவப்படுத்தியது
கொடை !
கடற்கரை மண்ணும்
காற்றும்  அலைகளூம்
கவர்ந்துதான்
கவிழ்ந்தேன்
காற்றுடன் என் மனமும் தூய்மை
கண்களுக்கு விருந்து !
கடலும் வானமும்
கள்ளமில்லா நட்பு !
கடலலையை
கணியாதவர்கள்
காணாமல்போனவர்கள்தான் !
கட்டுமரத்திலோ
கப்பலிலோ சென்றாலும்
கடல்
கன்னியை வணங்கித்தான் தொழில் !
கப்பம்
கட்டாமலே
கடலை
கவரலாம் !
காகிதத்தில்
கப்பல் செய்து
கடலருகே
கடக்க முடியுமா ?
காதலில் தோற்றவர்கள் கூட
கடலில்தான் மாயமானார்கள் !
கடற்கரை மணலில்
கண்மறைவாய்
காதலர்களின் குறும்பை
காவலர்கள்
கண்டிப்பதை
காண்பதற்கு கொடிது !

கடலும்
காசும் பொன்னும் தரும் வளம்தான்
கடல் வாணிபம்
கடல் மேலே
கட்சிதமாய் !
கடலுக்குள் ரகசியம்
காத்திருந்து
கரைந்தனர்
கடல் விரிப்பே
கண்ணாமூச்சி  
கதை அளப்பர் !
கடலுக்குள் வரலாறு
கடலுக்குள்
கலக்கும் எத்தனை ஆறு?
கடலுக்கடியில்
காணாத
காட்சிகள்
கண்டோமோ ?
கடலுக்கடியில் அதிசயம்
கடல்
கன்னிகளை
கண்டோமென்று ஒரு சாரர்
காலமிருக்கு
காத்திருக்க !
கடலுக்கும் கோபம் உண்டு
கடல் ஆழிப்பேரலை உருவில்
கடற்கரை நகரமே அழிப்பு
காணாமல்போனவர்களை
கண்டியீரோ ?
காட்சிகள்
கண்முன்னே சீற்றம் !
கடல் தந்த உப்பு
கண்ணியமிக்கது
“உப்பிட்டவரை
உள்ளவும் நினை”
கலச அஸ்தியை
கடலில்
கரைப்பது மண்ணில் மறைந்தவர்களுக்கு
கண்ணீரஞ்சலி !
கட்டிலில் படுத்தவன் கூட
கடலை
கடந்து விட முயற்சிப்பான்
கனவில் !
காசில்லையென்றாலும்
கண்ணை அகலப்படுத்தி
கடல் அலையை ரசிக்கலாம்
கவிதை துணைக்கொண்டு
காவியமாக்கலாம் !
கான மழை பொழியுமாம்
கட்டியணைத்து
கடும்தவம் புரியுமாம்
கடலலை !
கடலலையில் நனைந்தவர்கள்
கட்டித்தான் புரண்டார்கள்
கரையேற மனமில்லை !
கலங்கிய மனம் மனிதம்தான்
கலங்காதது
கடல்தான் !
கவலைகளை  
கலைந்திட
கடலுக்கும்
கருத்துண்டு
கிழக்கே உதிப்பவன்
கடலில் தானே மறைகிறான்
காத்திருக்கலாம்
கதிரவனின் மறைவை
கண்டு மகிழ !
கரையோர மீனவ
குடும்பம்
காத்திருக்குமாம்
கட்டுமரத்தில் சென்ற
கணவனை
காண
கண்டவுடன்
கட்டிபிடிக்குமாம் மகிழ்வுடன்
கைப்பிடித்தவனை
காண
கண் கோடி !
கருணை மனம் கொண்டு
கடலரசனை வணங்கி
கடலலையில்
காலை ஊன்றினால்
கவிதை பிறக்கும் தன்னாலே
காவியம் தவழும் மனதாலே
கவலைகள் பறந்தோட
கண்ணீர்
கசிந்துருகி மகிழ்ச்சியில் திளைத்திட  
கவிதைகள் பிறந்திட
கடற்கரையோரம் வாருங்கள்
கலங்கரை விளக்கம் காண்பீர்
கண்டவுடன் மகிழ்ச்சி கொள்வீர்.





தவறுகள் இருந்தால் சொல்லிக் கொடுக்க
தயங்கமால் சொல்லவும் 
திருத்திக் கொள்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad