கவிதைகள்
சக்தி – அன்பே சிவம்
சிவ சிவ
அன்பே சிவம்
என்னிடம் நிறைந்திருப்பது
அன்பு மட்டுமே
விருப்பமுள்ளவர்கள்
எம்மைத் தொடரலாம்
- இறைவன்.
கோபுர தரிசனம்
கோடிப் புண்ணியம்
மூலவரின் தரிசனம்
முக்தியின் பிறப்பிடம்
மனம் மனிதன் மரணம்
நான் மரணித்து விடுவேன்–என
நினைத்து மதியிழந்தயோ
மரணத்திலும்
விழித்திருப்பேன்-எந்நாளும்
மாசற்ற
மாணிக்கமாய் ஒளிவிடுவேன்.
மரணம் எமக்குப் புதிதல்ல
மதியிழந்த உனக்குத் தினம் தினம்
மரணம்தான்
மதியுள்ள எமக்குத் தினம் தினம்
விடியல்தான்.
காதல் கண்ணாமூச்சி
காகித
காற்றாடிப்போல்
பறந்து பறந்து
காகித வடிவில்
காதல் புராணம்
கசிந்துருகி
காதல் புரிகிறாய்
கண்மூடித்தனமானது
காதலாயென்று !
கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்
என்னை ஒருமுறை
கனவாயென்று
காதல்தான்
கனவல்ல
கற்பனையல்ல
கதாபாத்திரம்தான்
தோற்றம் கண்டு
மாற்றம் கொண்டேன்
தோல்வி பயம் கண்டு
கண்டேன் சீதையை ஒரு முறை
கண்களில் கொண்டேன் பலமுறை
காதல்
கடிதத்தில்
கவர்ந்தாய்
கற்பனையாய்
கடல் கன்னியேயென்று
காதலித்தேன்
கடற்காற்றில்
கரைத்தாய் என் மனதை
கடற்கரையோரம்
கடலலையாய்
கவிதையாய் அலையாய் அழகாய்
கவிதைக்குப் பின்னணி முன்னணி நீயாய்!
கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்ணை மூடியவள் நீயல்லவா
காதல் கடலில் விழுந்தது
நாமல்லவா
விழுந்தப்பின் எழுந்து
பார்த்தப்பின்
சிப்பிக்குள் முத்துவா?
விடைதெரிய
உனை தேடுகிறேன்
கதையாய் கதைத்தாய்
கவிதையாய் மிளிர்ந்தாய்
கனவாய் கலைந்தாய்
ஒரு தலைக் காதலால் அவதி
இருதலைக் காதலுக்கு
கொள்ளி
கொல்லுகின்ற காதலுக்கு
என் மனம் எதிரி
வெறிபிடித்த காதல்க்கு
வெகுளியாய் நான்
கனவை நனவாக்க வேற்றிடம்
தேடி
காதல்க்கு வைத்தேன்
முற்றுபுள்ளி
பயணம்
விலகிக் கொள்கிறேன்
விரயம்
ஏற்படுவதாயிருந்தால்
விழித்திருந்தேன்
விழிப்புணர்வுடன்
விடியலைக்காண
வழிமாறி மொழிமாறி
செல்வதற்கு முன்
செல்வநிலை கண்டிட்டு
விலகிக் கொள்கிறேன்
விதை
விருட்சமாய் நான் இல்லையே
விழியிருந்தும் விடை
இல்லையே
வதைப்பட்டு உதைப்பட்டு
விழி பிதுங்கும்
முன்-என்னை நானே
விலகிக் கொள்கிறேன்
வாழ்க்கைப்பயணம்
தடுமாற்றமின்றி
தடம் பதிக்க தகிப்பேன்
முயல்வேன்
திசை மாறாமல் குறி
தவறாமல்
ஒளி பொலிவிழக்காமல்
நேர் வழிப்பயணம்
மாசற்ற மாசில்லாமணியாய்
வெற்றியுடன்
சுபமாய் சுகம் தரும்
நான் விலகிக் கொள்வதாய் இல்லையே.
தவறுகள் இருப்பின் சுட்டி காட்டவும்
தவறாமல் திருத்திக் கற்றுக் கொள்கிறேன்
கருத்துரையிடுக
0 கருத்துகள்