Type Here to Get Search Results !

ஈஷா சத்குரு பொன்மொழிகள்

 உ 


ஈஷா சத்குரு பொன்மொழிகள்

கணபதி ஒரு ஞானியாகவும் அறிஞராகவும்

இருப்பதோடு, அறிவாற்றல், விவேகம், மற்றும் 

கற்பனைத்திறனின் சின்னமாகத் திகழ்கிறார். 

மனிதர்கள் விழிப்புணர்வாக மாறினால்

ஆதிக்கம் செலுத்தி சண்டையிடும் உணர்வு

காணாமல் போகும்.

உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன்

இருக்கும்போது மட்டும்தான், உங்கள்

புத்திசாலித்தனம், திறமை

மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.

ஆன்மிக செயல்முறை என்பது உங்கள்

ஞாபகங்களிலிருந்து உங்களை விலக்கி

வைத்துக்கொள்வது பற்றியது.உங்கள்

ஞாபகங்கள் அதன்மேல் நின்றுஇன்னும்

உயர்வான ஒன்றை நீங்கள் எட்டுவதற்கான

அடித்தளமாக இருக்க வேண்டும், உங்களை

முழ்கடிக்கும் பொறியாக இருக்கக் கூடாது.

சுற்றுச்சூழல் நிலைத்திருக்கத் தேவையான  

சில அடிப்படைகள் நாம் கவனித்துக்கொள்ள

தவறினால், நாம் கொடுக்கும் விலை

மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும்.

எதுவும் நீங்கள் எந்த அளவு கவனம் 

கொடுக்கிறீர்களோ அந்த அளவுதான்

உங்களுக்கு இணங்கிச் செயல்படும்.

இந்த விதத்தில் சுவாசம் ஒரு

அழகான கருவி, ஏனென்றால் அது

எப்போதும் நடந்துகொண்டு இருக்கிறது.

நீங்கள் உண்மையில் அன்பாய் இருந்தால்,

இன்னொருவர் அல்லது இன்னொன்று

உங்களைவிட முக்கியமானதாய் இருக்கிறது.

அந்தத் தன்மை உங்களுக்குள் வந்துவிட்டால்,

வளர்ச்சி சுலபமாகும்.

நீங்கள் சமநிலையில் இருக்கும்போது, உங்கள்

உடலின் ஒவ்வொரு உயிரணுவும்

இனிமையை உருவாக்கும்.

என் தாய், உகந்த சூழ்நிலையைகளை எனக்கு

உருவாக்கிக் கொடுத்தார், அவை இல்லாமல்

இன்று நான் இருக்கும் விதத்தில் 

இருந்திருக்க வாய்ப்பில்லை.

தாய்மை என்பது உடல்கூறு சம்பந்தப்பட்ட

விஷயம் அல்ல, நிபந்தனைகளற்ற ஏற்பு நிலை.

நீங்கள் இங்கு வாழும் காலம் மிகக் குறுகியது

என்பதை நீங்கள் புரிந்து வைத்திருந்தால்,

வாழ்வைநுண்ணுணர்வோடு வாழ்வீர்கள்.

நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்ற

விழிப்புணர்வுடன் எப்போதும் இருந்தால்,

உங்களுக்கு உண்மையாகவே எது முக்கியமோ

அதை மட்டும்தான் செய்வீர்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாட்டமான

விதத்தில் அணுகினால், நீங்கள் வாழ்க்கையைப்

பற்றிச் சீரியஸாக இல்லாத அதே சமயம்

முழு ஈடுபாடகவும் இருக்க கற்றுக்கொள்வீர்கள்.

 

மனிதர்கள்,'நான் முக்கியம்' எனும் நோயால்

அவதிப்படுகின்றனர். இந்தப் பூமியில்

நாம் இன்னுமொரு உயிர் மட்டுமே.

உங்கள் உயிர்பட அனைத்து உயிர்களுக்கும்

உங்களது பொறுப்பையும் உறுதியையும்

வெளிப்படுத்துவதற்கு இதுவே நேரம்.

ஆன்மிகப் பயிற்சிகளின் நோக்கம்,

ஒருவருக்குள் எல்லைக்குட்பட்ட

அனுபவத்தின் கூட்டமைப்புக்களை

அழித்து, பிரபஞ்சமயமான

சாத்தியத்திற்கு வழிவகுப்பதுதான்.

இருவர் ஒன்றினையும்போது,

அது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதாக

இருக்க வேண்டும்.ஒருவரிடமிருந்து

ஒருவர் மகிழ்ச்சியை

பிழிந்தெடுப்பதாக இருக்க கூடாது.

அன்பின் உறவு, உங்களை

இனிமையான உணர்வால் நிரப்புவதால்

அர்த்தமுள்ளதாக உள்ளது.

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்மீது

அக்கறை இருந்தால், அவர்கள்

உங்களுடன் இருக்க விரும்பும் விதமாக

உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

உங்கள் மனம் ஒரு நெருப்பு பந்தைப் போன்றது.

அதை நீங்கள் பயன்ப்படுத்தக் கற்றுக்கொண்டால்,

அது சூரியனைப் போல ஆக முடியும்.

 

குறிப்பு : ஈஷா மையத்திலிருந்து எனக்கு

வந்த மின்னஞ்சலிலிருந்து தொகுக்கப்

பட்ட "சத்குரு ஜக்கி வாசுதேவ்" அவர்களின்

சிறப்புப் பொன்மொழிகள்  


 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad