Type Here to Get Search Results !

பத்து கேள்விகள் பத்து பதில்கள் டாக்டர்.கலைஞர்

 பத்து கேள்விகள் பத்து பதில்கள் டாக்டர்.கலைஞர்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - டாக்டர். கலைஞர்
மு.கருணாநிதி 

 பத்து கேள்விகள் பத்து பதில்கள் 

கலைஞர் தனக்கு தானே கேட்டுக்கொண்ட கேள்விகளும் கேள்விகளுக்குத் தனக்கு தானே பதிலளித்து வெளியிட்ட கட்டுரை.பத்து கேள்விகளும் சிறப்பு பத்து பதில்களும் முத்தாய்ப்பு முத்தமிழ் அறிஞர் என உலக மக்களால் இன்றைக்கும் போற்றப்படுபவர் டாகடர் கலைஞர் அவர்கள்.

தமிழ் ஆர்வலர் அல்ல கலைஞர், தமிழே மூச்சு என வாழ்ந்தவர் 
தமிழ் தமிழர் தமிழ்நாடு எனக் கொள்கைப்பிடிப்போடு கடைசி வரை பின்பற்றிவர்.உலக தமிழ் மக்களின் நலனைப் பேணிக்காத்தவர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே ஆளுமை திறன் கொண்டவர், மதங்களுக்கெல்லாம் அப்பாற்றுப்பட்டவர்.இந்தியாவில் தலைசிறந்த ஆட்சியாளர்.இவர் புகழை அடுக்கலாம் அடுக்கிக் கொண்டே போகலாம், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தொலைவில் நிற்பவர்.

சொல்லுக்கு வடிவம் கொடுத்துச் செயலில் செய்து காட்டியவர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொல் ஆற்றல், எழுத்தாற்றல், அரசியல் சாணக்கியர், வெள்ளித்திரை வசனக்கர்த்தா, நகைசுவையாளர், பன்முகம் கொண்டவர்    அனைத்து துறைகளும் இவருக்குக் கைவந்த கலை.அனைத்து துறைகளிலும் திறம்பட பணியாற்றியவர்.ஓய்வறியா சூரியன் உலக தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.செம்மொழி திலகம் எனப் பெயர் பெற்றவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

வள்ளுவருக்கு கோட்டம் கண்டவர், குறளோவியம் படைத்தவர், குமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு வானளாவிய சிலை நிறுவியவர்.
நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், தொல்காப்பியத்துக்கு உரை, எண்ணற்ற நூல்களுக்குச் சொந்தக்காரர், சொல்லில் அடங்காப் புகழுக்கு உரிமையுள்ளவர்.மதநல்லிணக்கம் உடையவர், மக்கள் நலன் ஒன்றே உழைத்தவர்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - டாக்டர். கலைஞர் அவர்கள் எழுதியது தொடர்கிறது.

ஒன்று :-) ஒன்றே குலம் என்பது சரி.ஒருவனே தேவன் என்ற கருத்து ஏற்புடையதா ?

பதில் :-) அது தேவனோ தேவியோ சக்தி ஒன்று இருக்கிறது.அதுதான் இயற்கை.அதற்குக் கை, கால் இருக்கிறது.வரம் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையோ அது ஒருவரை வாழவைக்கும் அல்லது கெடுக்கும் என்று சொல்வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டு :-) உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வேணுகோபாலன் கோயில் ஒன்று இருக்கிறது என்றைக்காவது அங்குச் சென்றது உண்டா ?

பதில் :-) நான் வெளியூர் செல்லும்போது யாராவது அன்பின் காரணமாக வேல்கள், விநாயகர், அம்பாள் சிலைகளைப் பரிசாகத் தந்தால் அவற்றை இந்தக் கோவிலுக்கு அனுப்பி உள்ளேன்.நான் அனுப்பிய அந்தப் பொருட்கள் இந்தக் கோவிலுக்குப் போயிருக்கின்றன.நான் போனதில்லை.

மூன்று :-) உங்கள் கட்சியில் பலர் ஆத்திகர்களாக இருக்கிறார்களே ?

பதில் :-) என் குடும்பத்திற்கு உள்ளேயும்தான் இருக்கிறார்கள்.அதையே நான் அனுமதிக்கிறேன்.நேரு நாத்திக தலைவர்தான்.ஆனால் அவருடைய காங்கிரஸ் இயக்கம் நாத்திக இயக்கம் இல்லையே ?

நான்கு :-) தொல்காப்பியம், சங்கஇலக்கியம் தொடர்பாகச் சிலாகித்து பேசியுள்ள நீங்கள் பக்தி இலக்கியங்கள் தொடர்பாக எதுவும் சொல்வதே இல்லை.கடவுள் நம்பிக்கையை முன் நிறுத்துகிறது என்பதாலேயே அவற்றைப் புறக்கணித்து விட முடியுமா ?

பதில் :-) தொல்காப்பியம், சங்கஇலக்கியம்பெரும்பாலும் சாதி சமயம், பக்தி  இவற்றுக்கு அப்பாற்பட்ட  மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும்.அவற்றுக்குப் பிறகு வந்தவை பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை.புறம் தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்துத் தோய்ந்து இருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ தமிழ் மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிறுத்துகின்றன.

ஐந்து :-) நல்ல இலக்கியவாதியால் பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து.உங்களால் எப்படி இருக்க முடிகிறது ?

பதில் :-) இதற்கு விதிவிலக்கு உண்டு.ஜவஹர்லால் நேரு அடிப்படையில் இலக்கிய உள்ளமும் படைப்பாளிக்காண பண்பட்ட திறனும் கொண்டுருந்தவர்.சிறையிலிருந்து கொண்டு தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கிய செறிவு கொண்டவை.மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுத்திலும், பேச்சிலும், இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக்கொண்டு இருப்பதை காணலாம்.
பேரறிஞர் அண்ணா இலக்கிய பேரரசன். அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காக இதை நான் சொல்லவில்லை. அரசியல் எனக்குப் பிராணவாயு என்றால் இலக்கியம் எனக்குத் தெம்பு ஊட்டும் சரிவிகித உணவு.

ஆறு :-) ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என்று ஓய்வில்லா வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.மனதையும், உடலையும் சோர்வடையாமல் வைத்துக்கொள்ளத் தாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் என்ன?

பதில் :-) அதிகாலையில் ஐந்து மணிக்கு எல்லாம் உதயசூரியனை காண்கின்றேன்.என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா ?

ஏழு :-) தலைசிறந்த பத்து புத்தகங்களைப் பட்டியல் இடுங்களேன் ?

பதில் :-) 

ஒன்று - திருக்குறள் 
இரண்டு - தொல்காப்பியம் 
மூன்று - புறநானூறு
நான்கு - சிலப்பதிகாரம்
ஐந்து - பெரியார் ஈவேரா சிந்தனைகள்
ஆறு - அண்ணா எழுதிய பணத்தோட்டம்
ஏழு - கார்கியின் தாய்
எட்டு - நேருவின் உலக வரலாறு
ஒன்பது - அண்ணல் காந்தியின் சத்திய சோதனை
பத்து - ராகுல் சங்கருத்தியாவின் வால்கா முதல் கங்கை வரை

எட்டு :-) எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ அது நிறையவே நிறைவேறிவிட்டதா ?

பதில் :-) பெரும் அளவுக்கு நிறைவேறி உள்ளது.நிறைவேறியது. அனைத்தும் முழுமையான அளவுக்கு மன நிறைவை தந்துவிட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை.இன்னும் நிறைவேற வேண்டியவை நிறைய உள்ளன.அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

ஒன்பது :-) செய்ய நினைத்துச் செய்ய இயலாமல் போன காரியங்கள் என்னென்ன ?

பதில் :-)

மத்தியில் தமிழும் ஆட்சி மொழி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி 

மாநில சுயாட்சி 

இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

பத்து :-) திமுகவின் இறுதி இலட்சியம் ?

பதில் :-) 

சமுதாயத்துறையில் சமத்துவம், பகுத்தறிவு

பொருளாதாரத் துறையில் சமதர்மம்

அரசியலில் ஜனநாயகம் 


முற்றும்.



#கேள்விகள் #பதில்கள் #டாக்டர்கலைஞர் #பத்துகேள்விகள் #பத்துபதில்கள் #அறிஞர்அண்ணா #ஈவேரா #தந்தைபெரியார் #நேரு #அரசியல் #தமிழ் #தமிழ்மொழி #இலக்கியம் #சங்கஇலக்கியம் #புத்தகம் #உதயசூரியன் #கட்சி #திமுக #ஆட்சி #வேனுகோபாலன்கோவில் #ஆத் திகம் #நாத்திகம் #தமிழன் #தமிழர் #தமிழ்நாடு #ஒன்றேகுலம் #ஒருவனே தேவன் #காங்கிரஸ்இயக்கம் #நம்பிக்கை #நோக்கம் #புறகணிப்பு #இந்திரா #ஜவர்ஹலால்நேரு #பிராணவாயு #திமுகதலைவர்     

                   

            


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad