தினத்தந்தி வழங்கிய இப்படிக்கு தேவதை
தினத்தந்தி வழங்கும் “தேவதை” புத்தகம்
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும் “தினத்தந்தி” பத்திரிக்கையோடு இணைப்பு மலராக “தேவதை” இதழ் வெளிவருகிறது.
முழுக்க முழுக்க பெண்களுக்கானது.(மகளீர் மட்டும்) ஆண்களும் படிக்கலாம் தவறில்லை.”தினத்தந்தி” நாளிதழோடு இலவசமாய் வழங்கப்படும் இணைப்புப் புத்தகம்.
குறைந்த பக்கங்களே என்றாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கும்.படிப்பதற்கு அரைமணி நேரம் ஒதுக்கினால் முழு புத்தகத்தையும் வாசித்து விடலாம்.
தேவதை புத்தகத்தில் கல்வி, (Education)ஆரோக்கியம், (Health)
கவர் ஸ்டோரி, (Cover Story)அழகு, (Beauty) பாரம்பரியம், (Tradion) வாழ்வியல், (Biology) பேஷன், (Fashion) சமையல் ரெசிபி, (Cooking Recipe) வழிகாட்டி, (Guide) பரிசுப் போட்டி, (Prize Competition) மற்றும் தோட்டக்கலை, (Horticulture) இத்தனை விதமான தலைப்புக்களில் கட்டுரைகள் அமைந்துயிருக்கும்.
முக்கியமான தலைப்புக்களான “கவர் ஸ்டோரி“ மற்றும் வழிகாட்டி. இவ்விரு தலைப்புக்களில் அடங்கியிருக்கும் விஷயங்கள் வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல விரும்பும் மனித சமுதாயத்திற்கு ஏற்றக் கருத்துக்களாகயிருக்கும்.
வாழ்க்கையில் தங்களின் துயரங்களையும், மனதை வாட்டி வதக்கும் நெருக்கடிகளைக் களைந்துயெரியவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பெண்மணிகளுக்குத் தினத்தந்தி நாளிதழ் வழங்கும் இலவச இணைப்பாக ஞாயிறு தோறும் வெளிவரும் தேவதை புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
தேவதையை வாசியுங்கள் மற்றும் தேவதை புத்தகத்தைப் பத்திரப்படுத்துங்கள்.பின்னொரு காலத்திற்கும் ஏற்றப் புத்தகமாய் இருக்கும்.
“வழிகாட்டி” தலைப்பில் வாழ்க்கையில் தடுமாற்றங்கள் மற்றும் இக்கட்டானச் சூழல்கள் எதிர்க்கொள்ள தடுமாறும் போதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத தருணம் ஏற்படும் போதும் மனதில் இருக்கும் சிக்கல்களைக் களைய இந்த “வழிகாட்டி” தலைப்பு. பெண்களுக்கு இன்றியமையாத வரப்பிரசாதம்.
இந்தத் தலைப்பில் வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு மிக மிக அருமையாய் பதிலளிக்கும் மருத்துவர். சங்கீதா மகேஷ் அவர்கள் “உளவியல் நிபுணர்” உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்,
பல உலக மாநாடுகளில் பங்கேற்று சிறப்புரையாற்றியவர்.
நிறைய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்தும் இருக்கிறார்.
அனைத்து தரப்பினருக்கும் ஆண் - பெண் எனப் பேதம் இல்லாமல் மனநலம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்கள்.
வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு உற்ற தோழியாய், நெருங்கிய உறவாய், சிறந்த நல் ஆசிரியையாய், மருத்துவராய், பக்கத்து வீட்டில் வாழும் உடன்பிறவா சகோதரி போலவும், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல வாசகிகள் மன வருத்ததோடும், துயரத்தோடும் கேட்கும் கேள்விகளுக்கு மென்மையாய் யார் மனதும் புண்படாத வகையில் பதில் சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. போற்றத்தக்கது ஆகும்.
வாரம் இரண்டே கேள்விகள்தான் பிரசுரிக்கப்படும். வாசகிகளால் கேட்கப்படும், கேள்விகள் சிக்கல் நிறைந்த கேள்விகளாய் அமையும், படிக்கும் நமக்கும் ஒரு அனுபவமாய் இருக்கும்.மருத்துவரிடமிருந்து வரும் பதில்களோ சிக்கல்களை உடனடியாகத் தீர்க்கும் பதில்களாகவே புறப்பட்டு வரும்.
சில கேள்விகள் கண்ணீரை வரவழைக்கும், சில கேள்விகள் புருவத்தை உயர்த்தும், சில கேள்விகள் கன்னத்தில் கைவைத்து சிந்தனையில் ஈடுபடும். இந்தக் கேள்விகளை நம்மிடம் கேட்டால் நாம் சொல்லும் பதில் கேள்வி கேட்ட வாசகிக்கு என்னவாகயிருக்கும் என யோசிக்கும் மனஇயல்பு படிக்கும் ஒவ்வொருரிடமும் எழும்.
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதிலோ வியப்பில் ஆழ்த்தும்.பதில்கள் அனைத்தும் சிக்கல்களைக் களைய கூடிய வகையிலே இருக்கும்.கேள்வி கேட்டவர்களுக்கு இவரின் பதில் நூறு வயது நிரம்பிய பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் கூட இதுப்போல் பதில் வருமா என்பது சந்தேகம்தான். “ வழிகாட்டி” என்ற தலைப்பு மிக மிகப் பொருத்தம்.
உளவியல் நிபுணர் மருத்துவர்.சங்கீதா மகேஷ்“ வழிகாட்டி“ தலைப்புக்கு
“ தினத்தந்தி “யால் ஆகச்சிறந்த தேர்வு.
கலங்கி நிற்கும் மனங்களுக்குக் கலங்கரைவிளக்கமாய் மருத்துவரின் அறிவுபூர்வமான பதிலால் தீர்வையெட்டும்.
ஞாயிறுன்று வெளியாகும் “தினத்தந்தி” நாளிதழின் இலவச இணைப்பாக வெளிவரும் “தேவதை“ புத்தகத்தில் பிப்ரவரி மாதம் 2022 ஆண்டு தொடங்கிய கேள்வி - பதில் தொடர் பிப்ரவரி 2024 ஆண்டு முடிவுற்றது.
“இப்படிக்கு தேவதை” என்ற தலைப்பில் தினத்தந்தி வழங்கிய இலவச இணைப்பாக வெளிவந்த“ தேவதை” புத்தகத்தைப் படிக்க முடியாதவர்கள்“ சக்தி அச்சமில்லை” என்ற வலைப்பதிவில் பதிவிடுகிறேன்.
வாரம் இரண்டு கேள்விகள் வீதம் மாதம் எட்டு கேள்விகள்
எட்டு கேள்விகளை ஒரு பாகமாய் தொகுத்து பதிவிடுகிறேன்.
இந்தப் பதிவைப் படிக்கும்“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும் இந்தப் பதிவின் கீழ் இருக்கும்“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இது.
இப்படிக்கு தேவதை முதலாம் பாகம் இங்கே சுட்டவும்
இப்படிக்கு தேவதை இரண்டாம் பாகம் இங்கே சுட்டவும்
நன்றி “தினத்தந்தி”
கருத்துரையிடுக
0 கருத்துகள்