Type Here to Get Search Results !

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் 108 போற்றி

 உ 

சிங்கப்பெருமாள் ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நூற்றியெட்டு போற்றி

விநாயகர் துதி & ஸ்தோத்திரம்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் 

இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் 

கோலம் செய் துங்கக்கரி முகத்துத் தூமணியே 

நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 

தப்பாமற் சார்வார் தமக்கு


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப் 

போரானை கற்பகத்தைப் பேணினால் - வாராத 

புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் 

சக்தி தரும் சித்தி தருந்தான்


சிங்கப்பெருமாள் ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் 108 நூற்றியெட்டு போற்றி

ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி 

ஓம் நாடியருள் தெய்வமே போற்றி 

ஓம் அரசு அருள்வோனே போற்றி 

ஓம் அறக் காவலனே போற்றி 

ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி 

ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி 

ஓம் அழகிய சிம்மனே போற்றி 

ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி 

ஓம் அருள் அபயகரனே போற்றி 

ஓம் அகோபில நரசிம்மனே போற்றி 

ஓம் அரவப்புரியோனே போற்றி 

ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி 

ஓம் அகோர ரூபனே போற்றி 

ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி 

ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி 

ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி 

ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி 

ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி 

ஓம் ஈரெண் கரனே போற்றி 

ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி 

ஓம் உக்ர நரசிம்மனே போற்றி 

ஓம் உடனே காப்பவனே போற்றி 

ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி 

ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி 

ஓம் கதிர் நரசிம்மனே போற்றி 

ஓம் கதலி நரசிம்மனே போற்றி 

ஓம் கர்ஜிப்பவனே போற்றி 

ஓம் கம்பப் பெருமானே போற்றி 

ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி 

ஓம் கருடாத்ரி நாதனே போற்றி 

ஓம் கனககிரி நாதனே போற்றி 

ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி 

ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி 

ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி 

ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி 

ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி 

ஓம் கும்பி நரசிம்மனே போற்றி 

ஓம் கோல நரசிம்மனே போற்றி 

ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி 

ஓம் கோர நரசிம்மனே போற்றி 

ஓம் சந்தனப் பிரியனே போற்றி 

ஓம் சர்வாபரணனே போற்றி 

ஓம் சக்ர நரசிம்மனே போற்றி 

ஓம் சத்ர நரசிம்மனே போற்றி 

ஓம் சண்ட நரசிம்மனே போற்றி 

ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி 

ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி 

ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி 

ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி 

ஓம் சாந்த நரசிம்மனே போற்றி 

ஓம் சிம்மாசனனே போற்றி 

ஓம் சிம்மாசலனே போற்றி 

ஓம் சுடர் விழியனே போற்றி 

ஓம் சுந்தர சிம்மனே போற்றி 

ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி 

ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி 

ஓம் செவ்வாடையனே போற்றி 

ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி 

ஓம் செளம்ய நரசிம்மனே போற்றி 

ஓம் ஸ்தெளண நரசிம்மனே போற்றி 

ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி 

ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி 

ஓம் நவ நரசிம்மனே போற்றி 

ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி 

ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி 

ஓம் நின்றும் அருள்வோனே போற்றி 

ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி 

ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி 

ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி 

ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி 

ஓம் பக்த ரக்ஷகனே போற்றி 

ஓம் பகையழித்தவனே போற்றி 

ஓம் பஞ்ச முகனே போற்றி 

ஓம் பத்மாசனனே போற்றி 

ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி 

ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி 

ஓம் பாவக நரசிம்மனே போற்றி 

ஓம் பானக நரசிம்மனே போற்றி 

ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி 

ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி 

ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி 

ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி 

ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி 

ஓம் புராண நாயகனே போற்றி 

ஓம் புச்ச நரசிம்மனே போற்றி 

ஓம் பூவராக நரசிம்மனே போற்றி 

ஓம் மால் அவதாரமே போற்றி 

ஓம் மாலோல நரசிம்மனே போற்றி 

ஓம் முக்கண்ணனே போற்றி 

ஓம் மலையன்ன தேகனே போற்றி 

ஓம் முக்கிய அவதாரனே போற்றி 

ஓம் முப்பத்திரு க்ஷத்ரனே போற்றி 

ஓம் யோக நரசிம்மனே போற்றி 

ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி 

ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி 

ஓம் ருண விமோசனனே போற்றி 

ஓம் லோக ரக்ஷகனே போற்றி 

ஓம் வஜ்ர தேகனே போற்றி 

ஓம் வராக நரசிம்மனே போற்றி 

ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி 

ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி 

ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி 

ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி 

ஓம் விசுவரூபனே போற்றி 

ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி 

ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி 

ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி 

ஓம் லஷ்மி நரசிம்மனே போற்றி


நாராயணா நாராயணா நாராயணா 


ஓம் நமோ நாராயணாய 


நல்லதே நடக்கும் 


நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில் 


ஓம் நரசிம்மாய நம 


ஜெய் ஶ்ரீ நரஸிம்மா 


ஶ்ரீ நரசிம்மர் திருவடி சரணம் 


அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,

ஶ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் திருக்கோயில்,

ஶ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,

ஜி.எஸ்.டி. சாலை,

சிங்கப்பெருமாள்கோவில்,

செங்கல்பட்டு மாவட்டம் - 603204.


உங்கள் பார்வைக்கு 


ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாஷ்டோத்தர ச’த நாமாவளி: Sri Lakshmi Narasimhar Singaperumal Kovil பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் ஸ்லோகம் Padalathri Narasimha Perumal Sthuthi பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில்வரலாறு Padalathri Narasimhar Temple History



சிங்கப்பெருமாள் ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நூற்றியெட்டு போற்றி

படித்தது

எல்லா பெருமாள் கோவில் தீர்த்தம் தலையில் தடவக் கூடாது. பகவானின் திருவடி ஆசீர்வாதம் தொடக் கூடாது. ஒரு தண்ணீர் குடித்த தம்பளர் மூன்று தடவை கழுவிதான் தண்ணீர் குடிப்போம், அதுபோலத் தீர்த்தம் சாப்பிட்ட எச்சிலை தலையில் தொடக் கூடாது. பகவான் ஆசீர்வாதம் பெற முடியாது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad