![]() |
image credit Pixabay sarangib |
ஓம் நாரஸிம்ஹாய நம ஓம் மஹாஸிம்ஹாய நம ஓம் திவ்யஸிம்ஹாய நம ஓம் மஹாபலாய நம ஓம் உக்ரஸிம்ஹாய நம ஓம் மஹாதேவாய நம ஓம் உபேந்த்ராய நம ஓம் அக்நிலோசநாய நம ஓம் ரெளத்ராய நம ஓம் செள’ரயே நம ஓம் மஹாவீராய நம ஓம் ஸுவிக்ரமபராக்ரமாய நம ஓம் ஹரிகோலாஹலாய நம ஓம் சக்ரிணே நம ஓம் விஜயாய நம ஓம் ஜயாய நம ஓம் அவ்யயாய நம ஓம் தைத்யாந்தகாய நம ஓம் பரப்ரஹ்மணே நம ஓம் அகோராய நம ஓம் கோரவிக்ரமாய நம ஓம் ஜ்வாலாமுகாய நம ஓம் ஜ்வாலாமாலிநே நம ஓம் மஹாஜ்வாலாய நம ஓம் மஹாப்ரபவே நம ஓம் நிடிலாக்ஷாய நம 26 ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம ஓம் துர்நிரீக்ஷ்யாய நம ஓம் ப்ரதாபநாய நம ஓம் மஹாதம்ஷ்ட்ராயதாய நம ஓம் ப்ராஜ்ஞாய நம ஓம் ஹிரண்யக நிஷூதனாய நம ஓம் சண்டகோபினே நம ஓம் ஸுராரிக்னாய நம ஓம் ஸதார்த்திக்னாய நம ஓம் ஸதாசி’வாய நம ஓம் குணபத்ராய நம ஓம் மஹாபத்ராய நம ஓம் பலபத்ராய நம ஓம் ஸுபத்ரகாய நம ஓம் கராளாய நம ஓம் விகராளாய நம ஓம் கதாயஷே நம ஓம் ஸர்வகர்த்ருகாய நம ஓம் பைரவாடம்பராய நம ஓம் திவ்யாய நம ஓம் அகம்யாய நம ஓம் ஸர்வச’த்ருஜிதே நம ஓம் அமோகாஸ்த்ராய நம ஓம் ச’ஸ்த்ரதராய நம ஓம் ஹவ்யகூடாய நம ஓம் ஸுரேச்’வராய நம ஓம் ஸஹஸ்ரபாஹவே நம ஓம் வஜ்ரநகாய நம ஓம் ஸர்வஸித்தயே நம ஓம் ஜநார்தனாய நம ஓம் அனந்தாய நம ஓம் பகவதே நம ஓம் ஸ்தூலாய நம ஓம் அகம்யாய நம ஓம் பராவராய நம ஓம் ஸர்வமந்த்ரைக ரூபாய நம ஓம் ஸர்வயந்த்ர விதாரணாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பரமானந்தாய நம ஓம் காலஜிதே நம ஓம் ககவாஹனாய நம ஓம் பக்தாதிவத்ஸலாய நம ஓம் அவ்யக்தாய நம ஓம் ஸுவ்யக்தாய நம ஓம் ஸுலபாய நம ஓம் சு’சயே நம ஓம் லோகைகநாயகாய நம ஓம் ஸர்வாய நம ஓம் ச’ரணாகதவத்ஸலாய நம ஓம் தீராய நம ஓம் தராய நம ஓம் ஸர்வஜ்ஞாய நம ஓம் பீமாய நம ஓம் பீம பராக்ரமாய நம ஓம் தேவப்ரியாய நம ஓம் நுதாய நம ஓம் பூஜ்யாய நம ஓம் பவஹ்ருதே நம ஓம் பரமேச்’வராய நம ஓம் ஶ்ரீவத்ஸவக்ஷஸே நம ஓம் ஶ்ரீவாஸாய நம ஓம் விபவே நம ஓம் ஸங்கர்ஷணாய நம ஓம் ப்ரபவே நம ஓம் த்ரிவிக்ரமாய நம ஓம் த்ரிலோகாத்மனே நம ஓம் காலாய நம ஓம் ஸர்வேச்’வரேச்’வராய நம ஓம் விச்’வம்பராய நம ஓம் ஸ்திராபார்யாய நம ஓம் அச்யுதாய நம ஓம் புருஷோத்தமாய நம ஓம் அதோக்ஷஜாய நம ஓம் அக்ஷயாய நம ஓம் ஸேவ்யாய நம ஓம் வநமாலினே நம ஓம் ப்ரகம்பநாய நம ஓம் குரவே நம ஓம் லோககுரவே நம ஓம் ஸ்ரஷ்ட்ரே நம ஓம் பரஸ்மைஜ்யோதிஷே நம ஓம் பராயணாய நம ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ம ஸ்வாமியே நமஹ ஜெய் ஶ்ரீ நரஸிம்மா ஶ்ரீ நரசிம்மர் திருவடி சரணம் அருள்மிகு ஶ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் திருக்கோயில் சிங்கப்பெருமாள் ஸ்ரீ நரசிம்மர் ஸ்தல வரலாறு இத்திருக்கோயில் சிறந்த புராதான ஸ்தலமாகும். நரசிம்ம அவதார காலத்தில் இக்கோயிலைச் சுற்றி பெரிய வனம் இருந்ததாகவும், அக்காட்டில் ஜாபாலி எனும் மகரிஷி நரசிம்மரை நோக்கிக் கடுந்தவம் புரிந்து இரண்யனை வதம் செய்த கோலத்தில் தரிசனம் காண வேண்டினார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் ஒருநாள் அந்தி பொழுதில் பிரதோஷ வேலையில் அவருக்குத் தன் திருக்காட்சி தந்து அருளினார். ஜபாலி மகரிஷியின் வேண்டுதலை ஏற்று பாடலாத்ரி நரசிம்மராக இத்தலத்தில் அர்ச்சா அவதார திருக்கோலத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பல்லவர் கால குடைவரை கோயிலாகவும் பத்தாம் மற்றும் பதினோராம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் பராமரிக்கப்பட்ட கோயிலாகவும் இருந்தது. 1200 ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் ஒரு பிராத்தனை ஸ்தலமாகும். இங்குப் பாடலாத்ரி நரசிம்ம சுவாமியை வழிபட்டால் திருமணத்தடை, கடன் பிரச்சினை, எதிரிகளின் தொல்லை நீங்கும். குழந்தை பாக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க சிறந்த ஸ்தலமாகும். நவகிரகங்களின் முழு பங்களிப்பைப் பெற்ற இத்தலத்தில் செவ்வாய் தோஷம், ராகு திசை, சனி கிரக தோஷம் உள்ள அன்பர்கள் வழிபாடுகள் செய்தால் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். ஆலயத்தின் சிறப்புக்கள் ஶ்ரீ ஆண்டாளுக்கும், ஶ்ரீ லஷ்மி ந்ருஸிம்ஹப் பெருமாளுக்கும் தனித் தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன. மற்றும் ஆழ்வார்கள், ஆசார்ய புருஷர்கள் ஸன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன. ஸன்னதித் தெரு முனையில் சிறிய திருவடிகள் (ஶ்ரீ ஹனுமார்) ஸன்னதியும் அமைந்துள்ளது. சிங்கப்பெருமாள் ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவில் முகவரி அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோயில், ஜி.எஸ்.டி. சாலை, செங்கல்பட்டு வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் - 603204. நாராயணா நாராயணா நாராயணா ஓம் நமோ நாராயணாய நல்லதே நடக்கும் நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில் ஓம் நரசிம்மாய நம ஜெய் ஶ்ரீ நரஸிம்மா ஶ்ரீ நரசிம்மர் திருவடி சரணம்
மேலும் சிங்கப்பெருமாள் கோவில் உங்கள் பார்வைக்கு |
கருத்துரையிடுக
0 கருத்துகள்