லிங்காஷ்டகம்
மகிமை வாய்ந்த மந்திரம் லிங்காஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது
உறவுகளின் உறவு முறியாமல் இருக்கவும், எதிரிகளின் தொல்லை அடியோடு அழிந்து போக இந்த லிங்காஷ்டகம் ஸ்லோகத்தை சிவபெருமான் ஆலயத்தில் சிவபூஜையின்போது சொல்வது மிக நன்று.
இந்த மந்திரத்தை (ஸ்லோகங்களை) சொல்லிக் கயிலை மயிலானை வழிபட்டால் பேரானந்தம் கிட்டும்.
ப்ரம்ம முராரி ஸீரார்ச்சித லிங்கம் நிர்மல பாஸித சோபிதலிங்கம்
ஜன்மஜதுக்க விநாசக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ரவரார்ச்சித லிங்கம் காமதஹனம் கருணாகர லிங்கம்
இராவண தர்ப்ப விநாசகலிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸீகந்த ஸீலேபித லிங்கம் புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸீராஸீர வந்தித லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷிதலிங்கம் பணிபதி வேஷ்ட்டித ஷோபிதலிங்கம்
தக்ஷஸுயஜ்ஞ விநாசக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸீஷோபித லிங்கம்
ஸஞ்சிதபாப விநாசன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் பாவைர் பக்தி பிரேவச லிங்கம்
தினகரகோடி ப்ரபாகர லிங்கம் தத் பரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட்டதலோபரி வேஷ்ட்டித லிங்கம் ஸர்வஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாஸக லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸீரகுரு ஸீரவர பூஜிதலிங்கம் ஸீரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மகலிங்கம் தத் பரணமாமி ஸதாசிவ லிங்கம்
கோளறு பதிகம்
திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட கோளறு பதிகம் (முதல் திருமுறை) என்பது அடியார்களுக்கு எந்தக் கோள்களின் (நவக்கிரகம்) தீமையும், வினைகளும், நாட்களின் (திதி, வாரம், நட்சத்திரம்) பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி கூறும் அற்புதமான தேவாரப் பதிகம் ஆகும்.
"வேயுறு தோளிபங்கன்" எனத் தொடங்கும் இப்பதிகத்தை ஓதினால், சிவனடியார்களை கிரகங்கள் எதுவும் துன்புறுத்தாது. சிவனது திருநாமங்களைச் சிந்திப்பவர்களுக்கு, கோள்களும், நாட்களும், விதிகளும், தீய சக்திகளும் நன்மை மட்டுமே செய்யும். சிவபெருமானின் திருவடியைப் பற்றி வாழும் அடியார்களுக்குக் கோள்களால் வரும் எல்லாத் துன்பங்களும் நீங்கி, எப்போதும் வெற்றியே கிட்டும் என்பதே இதன் மையக்கருத்து.
கோளறு திருப்பதிகம் - தேவாரப்பாடல்கள்
வேயுறு தோளி பங்கன் விமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லனகுந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே சாறு(ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்வக்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றோ டெழுபதி னெட்டோடறு முடனா யநாள்க ளவைதாம் அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்வர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி யோளிநீ றணிந்து உமையொடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் தலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோ துமெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்வர்க்கு மிகவே. நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும் விடையேறுநங்கன் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின வவுணரொடு முருடியுமின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு(ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. வாள்தரி யதள தாடைவரி கோவணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தென் உளமே புகுந்த அதனால் கோளரியுழுவையோடு கொலையானை கேடில் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை யொருபாகமாக விடையேனு செல்வனடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தேன் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய் தன்று விடைமேலிருந்து மடவாட னோடு முடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன்றனோடு மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர் மிசையோனுமாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவா திலழிவிக்கும் அண்ணல் திருநீரு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொளாலை விளை செந்நெல்துன்னி வளர் செம்பொன் னெங்கும் திகழ நான்முக னாதியாய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
மதுராஷ்டகம்
மதுராஷ்டகம் என்பது ஸ்ரீ வல்லபாச்சார்யாரால் (கி.பி. 1479-1531) சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட எட்டு ஸ்லோகங்கள் கொண்ட புகழ்பெற்ற ஸ்தோத்திரம் ஆகும். இது கிருஷ்ணரின் இனிமையையும், அவரது லீலைகளின் மதுரத்தன்மையையும் கொண்டாடுகிறது.
'மதுரம்' (இனிமை) என்ற வார்த்தை ஒவ்வொரு ஸ்லோகத்திலும் மீண்டும் மீண்டும் வந்து, கிருஷ்ணரின் வடிவம், நடை, புல்லாங்குழல் இசை, பேச்சு, செயல்கள், சிரிப்பு என அனைத்தின் அதிசயமான இனிமையையும் விவரிக்கிறது. இந்த அஷ்டகம், பக்தன் கிருஷ்ணரின் 'மதுரமான' குணங்களில் முழுமையாக ஈடுபட்டு, உலக இன்பங்களை மறந்து அவரைப் பற்றிக்கொள்வதைக் குறிக்கும் ஒரு அழகான பக்திப் பாடலாகும்.
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராபதிபதே அகிலம் மதுரம்
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வசனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம ப்ரமிதம மதுரம் மதுராதிபதே அகிலம் மதுரம்
வேணுர் மதுரொ ரேணுர் மதுரோ பாணிர் மதுரா பாதெள மதுரெள
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராபதிபதே அகிலம் மதுரம்
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராபதிபதே ரகிலம் மதுரம்
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வஸிதம் மதுரம் ஸமிதம் மதுரம் மதுராபதிபதே ரகிலம் மதுரம்
குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசி மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம மதுராதிபதே ரகிலம் மதுரம்
கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் ஸிஷ்டம் மதுரம் மதுராபதிபதே ரகிலம் மதுரம்
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராபதிபதே ரகிலம் மதுரம்.







கருத்துரையிடுக
0 கருத்துகள்