மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்மர் அவதாரம்
ஓம் ஶ்ரீ கருடாழ்வார் நம
ஓம் ஶ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா
மந்திரத்தின் பொருள்
கருட பகவான் தன்னைவிட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும் தன் கால்களால் தூக்கி செல்லக்கூடிய சக்தி இவருக்கு உண்டு.
நமக்கு ஏற்பட கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும் அதை வெல்லக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டும் என்றால் இந்தக் கருடாழ்வார் மந்திரத்தைச் சொல்லவும்.
நாகதோஷம், சனி தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், மேலும் பல தோஷங்கள் உடல் உபாதைகள், எதிரி தொல்லை, பண பிரச்சினை இவற்றிலிருந்து முழமையாக விடுபட இந்த மந்திரத்தைத் தினமும் ஒன்பது முறை உச்சரிக்கவும்.
ஆலயத்தில் தாயாரை வணங்கிச் சொல்லும் திருமந்திரம்
ஶ்ரீ அஹோபில வல்லியை நமஹ
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்
ஶ்ரீய ஸர்வப்ரார்த்தனா!
நரசிம்மப்ரியா!
அஹோபிலவல்லி!
மந்திரத்தின் பொருள்
இந்த மந்திரம் தாயாரை வணங்கித் தினமும் பூஜை செய்யும் வேலையில் சொல்லி வந்தால், குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அமைதியின்மையும், ஆரோக்கிய குறைபாடும் நீங்கக்கூடிய ஒரு திருமந்திரம்.
ஶ்ரீ ஆண்டாள் தாயே நமஹ
ஶ்ரீமத் விஷ்ணு சித்தார்த்
மனோநந்தன ஹேதவே !
நந்த நந்தன ஸுந்தர்யை
கோதாயை நித்ய மங்களம்!!
ஸ்லோகத்தின் பொருள்
பெரியாழ்வாரின் புதல்வி, மனதிற்கு இனிமையானவளும், நந்தகோபரின் மகன் கண்ணனின் சுந்தரியுமான, கோதா தேவிக்கு நித்ய மங்களம்.
குறிப்பு :- “இந்த ஸ்லோகத்தை திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் தினமும் சொல்லலாம்“
ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹ ப்ரசோதயாத்
மந்திரத்தின் பொருள்
வஜ்ரம் போன்ற சிங்க நகங்களைக் கொண்டவரும்,
தன் பக்தர்களுக்கு எப்போதும் அருளை வாரி வழங்குபவருமான நரசிம்ம பெருமானே என்னைக் காத்தருளுங்கள்.
இந்த மந்திரத்தைத் தினமும் நூற்றியெட்டு (108) முறை கூறுவதன் பயனாக மனதில் உள்ள அச்சம் விலகும். கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்கள் விலகும்.
பகைவர் தொல்லை நீங்கும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
நரசிம்மரின் மஹா மந்திரம் பொருள்
கோபம், வீரம், தேஜஸ், (பிரகாசம்) கொண்ட மஹாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே!
எல்லா திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறுச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
எதிரிகளுக்குப் பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும் காட்டி எல்லாமும் நீயாக இருக்கின்றாய்.
உன்னை மனமார வணங்குகின்றேன், என்றவாறு சொல்லிக் காலைப் பிரம்ம முகூர்த்த நேரத்தில், நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுங்கள்.
ஓம் நரசிம்மாய நம
ஶ்ரீ
ஶ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் ஸ்துதி
(ஸ்தல புராணாந்தர்கதம்)
கீழ்க்கண்ட ஸ்துதியை இதயப்பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும், மனம் உருகிப் பிராத்தனை செய்து கொண்டால்
ஓடோடி வந்து நம்மைக் காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவப் பூர்வமாகக் கண்டறிந்த உண்மை!!!
ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ!
ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே! பாடலாத்ரெள நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத
நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே
நமஸ்தே ந்ருஸிம்ஹ அச்யுதாநந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதார
பரப்ரஹ்மருபம் ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரெளல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரெள
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்
கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்
பரமபுருஷமாத்யம் பாடலாத்ரெள ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேததாநம்
சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்ஹம்
ஶ்ரீ ந்ருஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யஸிம்ஹ! கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம்.
நல்லதே நடக்கும்
அருள்மிகு ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் ஸ்லோகம்
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
யதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி : ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்லோகம் பொருள்
நரசிம்மரே தாய் ; நரசிம்மரே தந்தை;
சகோதரனும் நரசிம்மரே ; தோழனும் நரசிம்மரே ;
அறிவும் நரசிம்மரே ; செல்வமும் நரசிம்மரே ;
எஜமானனும் நரசிம்மரே ; எல்லாமும் நரசிம்மரே ;
இவ்வுலகத்தில் நரசிம்மரே ; அவ்வுலகத்திலும் நரசிம்மரே ;
எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே :
உம்மைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!!
நரசிம்மரே!
உம்மைச் சரணடைகின்றேன்.
குறிப்பு :- இந்த ஸ்லோகத்தை தினமும் பதினெட்டு முறை கூறுங்கள்.
“ஓம் நரசிம்மாய நம”
“ஜெய் ஶ்ரீ நரஸிம்மா”
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயா!!
மனோஜவம் மருத துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீ ராம தூதம் சிரஸ நமாமி
மந்திரத்தின் பொருள்
ராமரின் தூதுவர், புத்திஜீவிகளில் முதன்மையானவர், சிந்தனையில் வேகமானவர் மற்றும் வேகத்தில் காற்று கடவுளுக்குச் சமமானவர், தனது புலன் உறுப்புக்களை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வானரப்படைகளின் தலைவனான, வாயு பகவானின் மகனான ஹனுமனுக்கு நான் பயப்பக்தியுடன் தலை வணங்குகிறேன்.
நாராயணா நாராயணா நாராயணா
ஓம் நமோ நாராயணாய
நல்லதே நடக்கும்
நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில்
ஓம் நரசிம்மாய நம
ஜெய் ஶ்ரீ நரஸிம்மா
ஶ்ரீ நரசிம்மர் திருவடி சரணம்
மஹாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்மர் அவதாரம்
வழிபாடு செய்ய உகந்த கிழமைகள் செவ்வாய் - புதன் - சனி
கோவில் முகவரி
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,
ஶ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் திருக்கோயில்,
ஶ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,
ஜி.எஸ்.டி. சாலை,
சிங்கப்பெருமாள்கோவில்,
செங்கல்பட்டு மாவட்டம் - 603204.
#தும்பிக்கையாழ்வார் ஸ்தோத்திரம் #கருடாழ்வார் மந்திரம்
#தாயார் ஶ்ரீ அஹோபில வல்லி திருமந்திரம் #ஶ்ரீ ஆண்டாள் ஸ்லோகம்
#நரசிம்மர் காய்த்ரி மந்திரம் #நரசிம்மரின் மஹா மந்திரம்
#ஶ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாள் ஸ்துதி
#அருள்மிகு ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் ஸ்லோகம் #ஶ்ரீ ஆஞ்சநேயா மந்திரம்
மேலும் உங்கள் பார்வைக்கு
ஓம் நரசிம்மாய நம


.webp)
கருத்துரையிடுக
0 கருத்துகள்